|
ஒரு நாட்டின் அரசன் ஒருவன் துறவி ஒருவரை சந்திக்கச் சென்றான். தன் பெருமையை அவரிடம் காட்ட நினைத்த அரசன் வைரக்கல் ஒன்றை அவரிடம் காட்டி, சுவாமி, மிகமிக மதிப்பு வாய்ந்த வைரக்கல் இது. இவ்வளவு உயர்வான பொருள் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது.! என்றான். அரசே.. மதிப்பு மிக்கதாக நீங்கள் கூறும் இதனால் உங்களுக்கு தினமும் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது? கேட்டார் துறவி. வைரத்தைப்பற்றி அவர் அறியாமையால் அப்படிக் கேட்பதாக நினைத்த மன்னன், அய்யா, இது வருமானம் தராது. இதனைப் பாதுகாப்பதற்குதான் ஆண்டுக்கு ஆயிரம் பொற்காசு செலவாகிறது... அவ்வளவு உ<யர்வானது இது..! என்றான். மெதுவாகப் புன்னகைத்த துறவி சொன்னார்.. மன்னா, எந்தவிதத்திலும் பயன்தராத இந்தக் கல்லைவிட, ஏழையின் குடிசையில் இருக்கும் மாவு அரைக்கும் கல் எவ்வளவோ உயர்ந்தது. அது இடைவிடாது பயன்தந்து அந்தக் குடும்பத்தையே காக்கும். எந்தப் பொருளுக்கும் மதிப்பு, அது தரும் பயனால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்..! உணர்ந்த மன்னன் தலை குனிந்தான்.
|
|
|
|