|
ஒரு அடர்ந்த காட்டின் வழியே குருவும் சீடனும் சென்றுகொண்டிருந்தார்கள். களைப்பும் பசியும் அவர்களை வாட்டியது. அப்போது ஒரு உயர்ந்த மரத்தில் கனி ஒன்று தொங்குவதைக் கண்டான் சீடன். மிகவும் ருசியானது அது என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அவசர அவசரமாக கல்லை எடுத்து வீசினான் சீடன். பலமுறை முயற்சித்தும் பழம் விழவே இல்லை. சோர்ந்துபோய் அமர்ந்தான் அவன். அப்போது, ஒரு கல்லை எடுத்து வீசினார் குரு. மறுநிமிடம் கனி கீழே விழுந்தது. குரு ஏதோ மந்திர வித்தை அறிந்திருக்கிறார் என நினைத்த சீடன், அதைக் கற்றுத் தரும்படி கேட்டான். குரு அமைதியாகச் சொன்னார், நீ கல்லை விட்டெறிந்தபோது உன் நினைவு முழுக்க அதன் ருசியில் பதிந்து இருந்தது. ஆனால், நான் பழத்தை மட்டுமே நினைத்தபடி கல்லை எறிந்தேன்... அவ்வளவுதான்...! |
|
|
|