|
ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர், தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். புத்திசாலித்தனம் என்பது ஒவ்வொருவரும் தானே கற்றுக் கொள்வதால் தான் வருமே தவிர அதனை யாரும் கற்றுத் தரமுடியாது..! இதை கவனித்துக்கொண்டிருந்த சீடன் ஒருவன் எழுந்து குருவிடம், கெட்டிக்காரத்தனத்தை எப்படிக் கற்றுக் கொள்வது என்று வினவினான். <உனக்கு குதிரை ஏறத் தெரியுமா என்றார். தெரியும் என்றான். புதிதாகக் கற்றுக் கொள்பவனிடம் என்ன சொல்வாய்? கற்றுக் கொள் என்பேன்.! புத்திசாலித்தனமும் அப்படித்தான். அவரவர் அனுபவத்தால் மட்டுமே வரும்.! சீடன் புரிந்து கொண்டான். |
|
|
|