|
மாளவ தேச மன்னன் சந்திராங்கதன் நீதி தவறாதவன். அவனது மனைவி இந்துமதி கணவனுக்குஅடங்கி நடக்கும் குணவதி. ஒருமுறை, காட்டில் இருந்த அழகிய தடாகத்தில் நீராடினான். தடாகத்தின் அடியில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதைப் பார்த்தான். அந்தப் பாதை நாகலோகத்திற்செல்வதாகும். அந்தப் பாதை வழியாகநாககன்னி ஒருத்தியும் நீராட வந்தாள். தடாகத்தில் குளித்த மன்னனின் அழகில் மனதைப் பறி கொடுத்தாள். வலிய அவனை நாகலோகத்திற்இழுத்துச் சென்றாள்.பானம், விருந்து என அமர்க்களப்படுத்தினாள்.அவனோடு கூடி மகிழ்ந்தாள். தடாகத்தின் கரையில் காத்திருந்த காவலர்கள், மன்னரைக் காணாமல், அவர் மூழ்கி விட்டதாகக் கருதி நாடு திரும்பினர். ராணி இந்துமதியிடம் நடந்ததைக் கூறினர். கணவன் மேல் அதீத அன்பு கொண்ட அவள், அனலில் இட்ட மெழுகாய் உருகினாள். உண்ணாமலும், உறங்காமலும் அழுது கொண்டேயிருந்ததால் துரும்பாக இளைத்தாள். இருந்தாலும், அவள் மனம் நம்பிக்கை இழக்கவில்லை. என் நாதன் மூழ்கிவிட்டார் என்பது ஒரு அனுமானம் தான்! அவர் நிச்சயம் திரும்பி வருவார் என்று நம்பினாள். தோழிகளும் இந்துமதிக்அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகள் கூறினர். இப்படியே 12 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒருநாள் ஹரிநாம சங்கீர்த்தனம் அவள் காதில் விழ நிமிர்ந்து பார்த்தாள். மகதி யாழை இசைத்தபடி நாரதர் வானில் சஞ்சரிப்பதைக் காண்டாள். அவரைக் கை குவித்து வணங்கினாள்.தனக்நேர்ந்த துன்பத்தைக் கூறி வழிகாட்டும்படிவேண்டினாள். மகளே! நீ கவலை கொள்ளாதே! உன் கணவன் இறக்கவில்லை. அவன் இப்போது நாககன்னி ஒருத்தியின் பிடியில் சிக்கிக் கொண்டுஇருக்கிறான்என்று எடுத்துரைத்தார். அதைக் கேட்ட இந்துமதி மகிழ்ந்தாள்.சுவாமி! அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். அதேநேரம், அவரை அங்கிருந்து விடுவிக்கும் வழியையும் தாங்களே தெரிவிக்க வேண்டும்! என்று கேட்டாள். மகளே! விநாயகப்பெருமானை நினைந்து, சதுர்த்தி விரதத்தை மேற்கொள். உன் கோரிக்கைநிறைவேறும், என்றார்அவளுக்சதுர்த்தி விரதமகிமையை எடுத்துரைத்தார். இந்துமதியும் கணபதியின் திருவடியைச் சிந்தித்து விரதம் இருந்தாள். விநாயகரின் அருளால் நாககன்னி மனம் திருந்தினாள். சந்திராங்கதனை பூலோகத்திற்அழைத்து வந்து இந்துமதியிடம் ஒப்படைத்தாள். அதன் பின் சந்திராங்கதனும் சதுர்த்தி விரதம் மேற்கொண்டு அருள் பெற்றான்.
|
|
|
|