|
ஒரு வயோதிகர்,தன்னுடையகுதிரைகளில், பாதியை தன் ஒரே மகனுக்கும், 25 சதவீதம் கிராமத்துக்கோயிலுக்கும், 20 சதவீதம் தனக்கு சேவை செய்தஊழியனுக்கும் கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதினார். அவர் காலமானதும், அவருக்கு சொந்தமாக 19 குதிரைகள் இருந்தன. கிராமத்து பிரமுகர்களுக்கு இதை எப்படி பிரிப்பது என்று தெரியவில்லை. எவ்வளவு யோசித்தாலும், வழி தெரியவில்லை. கடைசியில், தீர்வு வேண்டி கோயிலில் பிரார்த்தனை செய்தார்கள்.இரண்டு நாட்கள் வரை ஒன்றும் நடக்கவில்லை.கடவுளிடம் விட்டு விட்டதால், ஏதாவது கட்டாயம் நடக்கும் என்று பிரமுகர்கள், நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. ஒரு முனிவர்ஒரு குதிரையில் அந்த வழியே வந்து, கோயிலில்இளைப்பாறிக் கொண்டிருந்தார்.கிராமத்துப் பிரமுகர்கள் அவரை உபசரித்த பிறகு, அவர்களுடைய குழப்பத்தை தெரிவித்து, ஏதாவது உபாயம் சொல்ல முடியுமா என்று விண்ணப்பித்தனர். முனிவர், கவலைப்படாதீர்கள். இன்றே, இப்பொழுதே உங்கள் பிரச்னைக்கு முடிவு காணலாம். வயோதிகருடைய குதிரைகளை இங்கு கொண்டு வந்து கட்டிப்போடுங்கள்; அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் கூட்டி வாருங்கள்; அதே சமயம், பள்ளியில் படிக்கும் ஒரு பாலகனையும் கூட அழைத்து வாருங்கள், என்றார்.
முனிவர் சொல்படி எல்லாம் தயாரானவுடன், பாலகனை அங்கிருக்கும் குதிரைகளை எண்ணச் சொன்னார்.பாலகன்: 20 குதிரைகள் உள்ளன அய்யா.. (பாலகன் முனிவர் குதிரையையும் சேர்த்து எண்ணி விட்டான்)முனிவர்: நல்லது.... எவ்வளவு குதிரைகள் கண் மூடப்படவில்லை; எவ்வளவு குதிரைகளுக்கு கண்களை மறைக்கும் கடிவாளங்கள் இணைக்கப்பட்டுள்ளன?பாலகன்: 2 குதிரைகளுக்கு மட்டும் கண்கள் மறைக்கப் பட்டிருக்கின்றன. மற்ற18 குதிரைகளின் கண்கள் மூடப்படவில்லை.முனிவர்: பாலகா! குதிரைப் பாகனை அழைத்து, அந்த இரண்டு குதிரைகளின் கண்களை திறந்து விட சொல். அவைகளும் எல்லா பக்கமும் நன்கு பார்க்கட்டும்.பிறகு, பாலகன் கணக்குப்படி இருந்தஇருபது குதிரைகளில், பாதி 10 குதிரைகள் வயோதிகரின் மகனுக்கும், 25 சதவீதமான 5 குதிரைகளை கோயிலுக்கும், 20 சதவிகிதமான 4 குதிரைகளை ஊழியருக்கும் கொடுத்து விட்டு, கடைசியாக கட்டப்பட்டு இருந்ததன்னுடைய குதிரையில் முனிவர் ஏறி, விடை பெற்று சென்றார்.கிராமத்து பெரியவர்களால் தங்கள் கண்களையும்,காதுகளையும் நம்ப முடியவில்லை. முனிவர் விடைபெறும் முன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும், பசுமரத்தில் அறைந்த ஆணி போல, ஒவ்வொருவர்மனத்திலும் இறங்கியது.பகவான் மேல் முழு பக்தியுடன், உண்மையாக தர்ம செயல்கள் ஆற்றும் மனிதர்களுக்கு, மாற்று வழிகள் தானாகவே தோன்றும்; அல்லது மற்ற மனிதர்கள் மூலம் தெரிய வரும், என்ற உண்மையும், உபாயேன ஸர்வம் ஸக்யம் (உத்திகளால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்) என்ற உண்மை புரிந்தது.முனிவர் ஏன் குதிரைகளின் கண் அடைப்பை (கடிவாளத்தை) எடுக்கச் சொன்னார்? கண்களைத் திறந்து, மாற்றுக் கோணத்துடன் ஒரு பிரச்னையைநோக்கினால், அதற்கு விடை கிடைக்கும் என்பதற்காகத் தான். |
|
|
|