|
தாயம் பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்ட வியாபாரி ஒருவர் இருந்தார். தர்மசிந்தனை என்பது மருந்துக்கும் அவரிடம் இல்லை. மறந்தும் கூட நெற்றியில் திருநீறு பூசமாட்டார். ஆனால், அவருடைய மனைவியோ, நல்ல குணவதி. தர்மசிந்தனையும், பக்தியும் நிறைந்தவள். கணவர் மீதும் அலாதி அன்பு வைத்திருந்தாள்.கணவரை எப்படி திருத்துவது என்றுபுரியாமல் தவித்தாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. வாழ்க்கையில எவ்வளவோபிரச்னையைக் கடக்க வேண்டியிருக்கு!இதில சாமி, பூதம் இதுக்கெல்லாம் எங்க நேரமிருக்கு! எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்! என்று மட்டும் பதில் சொல்வார். அந்த வியாபாரிக்கு ஒருநாள் நோய் வந்து சிரமப்பட்டார். மனைவியிடம் வைத்தியரை அழைத்து வரும்படி சொன்னார். நாடி பிடித்துப் பார்த்த வைத்தியர் பரிசோதித்து விட்டு, சில மருந்துகளைக் கொடுத்தார். எளிதில்ஜீரணமாகும் ஆகாரம் கொடுத்து, அதன்பின் தவறாமல் மருந்தும் சாப்பிட்டால் குணம் உண்டாகும் என்றார். அவளோ இது தான் சமயம் என மருந்துகளை அலமாரியில் பூட்டி வைத்தாள். மருந்து கொடுக்காத மனைவியிடம் கோபத்துடன், மருந்து சாப்பிடாம நோய் தீருமா? நான் போன பிறகா மருந்து கொடுப்பே? என்று கத்தினார் வியாபாரி. காத்துள்ள போதே துõற்றிக்கொள்ளணும்! இப்பவாவது புரிஞ்சுதே!உடல் நோய்க்கு இந்த மருந்தைச் சாப்பிட்டா போயிடும். பிறவியும் கூட நோய் தான்! அதுக்கு பக்தியும், செய்யுற தர்மமும் தான் மருந்து! அதையும் நீங்க புரிஞ்சுக்கங்க! என்று சொல்லி மருந்தைக் கொடுத்தாள். ஊதுகிற சங்கை அவள் ஊதி வைத்தாள். இந்த வார்த்தைகள் என்றாவது ஒருநாள்வியாபாரியைத் திருத்தாமலா போகும்!இந்தக்கதையில் வருவது போல, நமது குழந்தைகளுக்கும் நிறைய நல்ல விஷயங்களைக் காதில் போட்டு வைப்போம். எதிர்காலத்தில், அவற்றைக் கடைபிடிக்க அவர்களுக்கு துõண்டுதலாயிருக்கும்.
|
|
|
|