|
புத்தர் மீது அன்பு கொண்ட ஏழை ஒருவர், தன் வீட்டில் சமைக்கப்பட்ட குடைக்காளான் (நாய்க்குடை) உணவை அவருக்கு வழங்கினார். அந்த காளான் விஷம் என்பதை அறியாமல் அந்த ஏழை சமைத்து விட்டார்.விஷயம் தெரியாமல் கொடுத்தாலும், ஏழையின் அன்புக் காணிக்கையை ஏற்ற புத்தர் அதை சாப்பிட்டு விட்டார். புத்தரின் உடம்பில் விஷம் ஏறியது.இதையறிந்த ஏழையும், சீடர்களும் பதறிப் போனார்கள். இதற்குள் படுக்கையில் சாய்ந்து விட்ட புத்தர் ஏழையிடம், விஷத்தால் எனக்கு பாதிப்பு வந்து விட்டுப் போகட்டும். ஆனால், அதில் கலந்திருக்கும் அன்பால் அமிர்தம் சாப்பிட்ட உணர்வை பெற்@றன் என்று சொல்லி தேற்றினார்.சீடர்களை அழைத்து, சீடர்களே! எனக்கு உணவு அளித்த இந்த ஏழை பாக்கியசாலி என்று அறிவிப்பு செய்யுங்கள். இல்லாவிட்டால், மக்கள் இவரைக் குற்றவாளி என்று சொல்லி தண்டனை வழங்க முடிவு செய்து விடுவார்கள். எனக்கு முதன் முதலில் உணவு அளித்த தாயைப் போல, இந்த ஏழையும் கொண்டாடத் தக்கவனே! என்று நெகிழ்ந்தார். சீடர்களும் அதன்படியே அறிவிப்பும் செய்தனர்.
|
|
|
|