|
சுவாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருடன் பயணித்த இரு ஆங்கிலேயர்கள் ஏளனமாகப் பார்த்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள்இருவரும், அவருடைய காவி உடை, முகத்தோற்றத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலத்தில் பேசிக் கொண்டுஇருப்பதால், விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.சிறிதுநேரத்தில் வண்டிநிற்கவும், ரயில்வே அதிகாரிஒருவர் அதில் ஏறினார்.அவரைக் கண்ட விவேகானந்தர் அழகாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.பயத்தில் முகம் வெளிறிப் போன ஆங்கிலேயர்கள், தங்களைப் பற்றி அதிகாரியிடம் விவேகானந்தர் சொல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், கடைசிவரையில் விவேகானந்தர் சொல்லவே இல்லை. பயத்துடன் ஆங்கிலேயர்கள் விவேகானந்தரை அணுகினர்.ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஏன் எங்களைக் கோபித்துக் கொள்ளவில்லை? என்றனர். முட்டாள்களைப் பார்ப்பது இது ஒன்றும் எனக்கு முதல் முறை இல்லையே! என்று புன்முறுவலுடன் பதிலளித்தார் உண்மையில் விவேகானந்தர் அப்போதும் கோபித்துக் கொள்ளவில்லை. நீங்கள் பேசிய இழிசொற்கள் தனக்கு உரியதல்ல என்பதை மட்டும் தெளிவுபடுத்தினார்.விவேகானந்தரின் விவேக புத்தியை அறிந்த ஆங்கிலேயர்கள் மன்னிக்குமாறு வேண்டினர். |
|
|
|