|
மெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ராக்பெல்லர் முதுமையிலும் கடும் உழைப்பாளியாக இருந்தார். எப்போதும் ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுவது அவர் வழக்கம். தொழில் விஷயமாக அடிக்கடி வெளிநாடு செல்லும் அவர், ஒருமுறை விமானத்தில் வந்த போது, பக்கத்து இருக்கையில் இருந்த இளைஞர் ராக்பெல்லரிடம் பேச்சு கொடுத்தார். ஐயா! வணக்கம்! நான் ஒன்று கேட்டால் நீங்கள் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! என்றார். ராக்பெல்லரும்புன்முறுவலுடன்தலையசைத்தார். கோடீஸ்வரரான நீங்கள், இந்த தள்ளாதவயதிலும் உழைக்கத் தான் வேண்டுமா?தலைமுறைக்கும்தேவையான செல்வம் உங்களிடம் இருக்கிறதே! இப்போதும்இல்லாமல் எப்போது ஓய்வெடுப்பீர்கள்? என்று கேட்டார். ராக்பெல்லர் இளைஞரிடம்,நன்றாக கேட்டீர்கள்! நாம் பயணிக்கும் இந்த விமானம் இப்போது நல்லஉயரத்தில்இருக்கிறது. பூமியில் இருந்து ஓடுதளத்தில் இருந்து சிரமப்பட்டு மேலே எழுந்து,சுலபமாகப் பறக்கும் இதன் இன்ஜினை நிறுத்தி விட்டால் என்னாகும்? என்று கேட்டார். விபத்து நேரும்! என்றார் இளைஞர்.விமானப்பயணம் மட்டுமில்லை. வாழ்க்கைப்பயணத்திற்கும் இது பொருந்தும். வாழ்வில் முன்னேறி விட்டோம் என்று யாரும் உழைக்காமல் இருக்கக் கூடாது.வருமானத்திற்காக மட்டும் என்று இல்லாமல் உடல்நலம், மன மகிழ்ச்சி, நிறைவான வாழ்க்கை இவற்றை அனுபவிக்கவும் மனிதன் உழைக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது, என்றார் ராக்பெல்லர். |
|
|
|