Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோபக்காரி கொடுத்த வரம்!
 
பக்தி கதைகள்
கோபக்காரி கொடுத்த வரம்!

ஏழை அந்தணக் குடும்பத்தில் ராமன் என்னும் சிறுவன் இருந்தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்தான். அவனுடைய தாய்சிறுவனை அழைத்துக் கொண்டு, தான் பிறந்த ஊரான தெனாலிக்குப் புறப்பட்டாள். அங்கு ராமன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்தான். ராமனுக்குப் படிப்பு வரவில்லை. ஆனால், நகைச்சுவையாகப் பேசும் திறமையைக் கொண்டு, அனைவரையும் கவர்ந்து விட்டான்.ராமன் வாலிபப் பருவத்தை அடைந்த பிறகு, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் உண்டானது. என்ன செய்வது என்ற கவலை எழுந்தது. ஒருநாள் தெனாலிக்கு ஒரு துறவி வந்திருந்தார். அவரிடம் தன் நிலையைச் சொல்லி வருந்தினான். இரக்கப்பட்ட துறவி, காளியின் மூல மந்திரத்தை உபதேசித்து, இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜெபித்து வா! காளி உனக்கு பிரசன்னமாகி வேண்டும் வரம் தருவாள், என்று வழிகாட்டினார்.அதன்படி ராமனும் அந்த ஊரில் இருந்த காளி கோயிலுக்குச் சென்று அந்த மந்திரத்தைநுõற்றியெட்டு முறை ஜெபித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்தான். காளியின் தரிசனம் கிடைக்கவில்லை. இருந்தாலும், மனதை ஒருமைப்படுத்தி ஜெபத்தை விடாமல் தொடர்ந்தான். சூரியன் மறைந்து எங்கும் இருள் படரத் தொடங்கியது. ராமன் காளி கோயிலை விட்டு நகரவில்லை. அன்றிரவு தான், காளி அவன்எதிரில் தோன்றினாள்.ஏன் அழைத்தாய் மகனே! உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டாள்.

தாயே! நான் வறுமையில் வாடுகிறேன். அதைப் போக்க வழி காட்டுங்கள். எனக்கு நல்லறிவும் தர வேண்டும் என்றான்இதைக் கேட்ட காளி கலகலவென சிரித்தாள்.அடேய்! உனக்குப் பேராசை தான்.கல்வியும் வேண்டும், செல்வமும் வேண்டுமா?ஆம் தாயே! புகழ் பெற கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் நீ தந்து அருள்புரிய வேண்டும். என்றான் ராமன்.காளி தன் இரண்டு கைகளையும் நீட்டினாள். அதில் இரண்டு பால் கிண்ணங்கள் இருந்தன. அந்தக் கிண்ணங்களை அவனிடம் தந்தாள் காளி.ராமா! இதிலுள்ள பால் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டும் இப்போது குடித்துக் கொள்ளலாம். எது தேவை என்பதை நீயே முடிவு செய்து கொள் என்றாள்.ராமன், நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒன்றை மட்டும் குடிக்கச் சொன்னால் எப்படி? எதை எடுப்பது என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி நின்றான். பிறகு சட்டென்று இடது கையிலிருந்த பாலை (செல்வம்) வலது கையிலிருந்த கிண்ணத்தில் (கல்வி) கலந்து, இரண்டையும் வேகமாக குடித்து விட்டுச் சிரித்தான்.அதுகண்டு காளியே திகைத்துப் போனாள்.அடேய்! நான் உன்னை ஒரு கிண்ணத்து பாலைத் தானே குடிக்கச் சொன்னேன்! ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன். என்றான்.ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே அம்மா!இதுகேட்டு காளி சிரித்து விட்டாள்.காளியும், பாலகா! நான் உக்கிர தேவதை. என்னிடம் வரம்பு மீறினால் அவர்களை அழித்து விடுவேன் என்பதையும் நீ அறிவாய். ஆனால், கோபக்காரியான என்னையே சிரிக்க வைத்து விட்டாயே! என்னை ஏமாற்றினாலும் நீ அறிவில் சிறந்தவன். விகடகவி என்னும் பெயருடன் வாழ்வில் சிறந்து விளங்குவாய், என்று வரம் அளித்து மறைந்தாள்.இந்த ராமன் தான், பிற்காலத்தில் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவி தெனாலி ராமனாக புகழ் பெற்று விளங்கினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar