Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பேதை கூட மேதை ஆகலாம்!
 
பக்தி கதைகள்
பேதை கூட மேதை ஆகலாம்!

உஜ்ஜைனி நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவன், படிப்பறிவற்ற காரணத்தால் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டான். அவ்வூரில் இருந்த ஆசிரியர் ஒருவரிடம், அந்த நாட்டுஇளவரசி கல்வி கற்று வந்தாள். இளவரசி என்ற இறுமாப்பினால், அவள் ஆசிரியரை மதிக்காமல் நடந்து கொண்டாள். ஆத்திரம்அடைந்த ஆசிரியர், அவளுக்கு தக்க பாடம் கற்பிக்கமுடிவெடுத்தார். தந்திரமாக ஆடு மேய்க்கும் இளைஞனுக்கு இளவரசியை மணம் முடிக்க ஏற்பாடு செய்து விட்டார்.திருமணத்திற்குப் பின், இளவரசிக்கு உண்மை தெரிந்து விட்டது. ஆனால், அவள்சிறிதும் கலங்கவில்லை. அவள் ஆணவம் மிக்கவள் தான்! என்றாலும், அவளுக்கு காளி மீது அபார பக்தி இருந்தது. தன் கணவன் சிறந்த அறிவாளியாக விளங்க வேண்டும் என வேண்டி விரதமிருந்தாள்.காளியின் மூல மந்திரத்தை ஜெபித்து வரும்படி கணவனிடம் கூறினாள். அவனும் மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தான். அவனது ஆழமான பக்தி கண்ட காளி உள்ளம் மகிழ்ந்தாள். நேரில் அவனுக்கு காட்சியளித்ததோடு, தன் திரிசூலத்தால் அவனுடைய நாவில் எழுதி அருள்புரிந்தாள். ஏதும் அறியாத அந்த ஆடு மேய்ப்பவன் எல்லாம்அறிந்தவனாகி, உலகம் போற்றும் மகாகவி காளிதாசராக மாறினார்.போஜராஜனின் அரசவையில் தலைசிறந்த புலவராக விளங்கினார். அம்பிகையின் திருவடியை நம்பி விட்டால் பேதையும் கற்ற மேதையாகலாம் என்பதை இதன் மூலம் நிலைநாட்டி அருள் புரிந்தாள் மகாகாளி. நவராத்திரி காலத்தில் ஓம் காளி என்றமூலமந்திரத்தை நீங்களும் நம்பிக்கையுடன் ஜெபிக்கத் தொடங்குங்கள். நினைத்ததைச் சாதிக்கும் வல்லமையைப் பெறுங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar