|
தமிழ்த்தென்றல் எனபுகழப்படும் பேச்சாளர் திரு வி.கல்யாணசுந்தரனாரிடம் (திரு வி.க.,) அவரது மனைவி ஒருமுறை,என்னங்க! நீங்க பெரிய படிப்பாளின்னு பேர் வாங்கிட்டீங்க! கல்வியால் தான், உங்களுக்கு பெருமை. ஆனால், உங்களுக்கு வாழ்க்கைப்பட்ட நான் படிக்காதவள். எனக்கும் உங்களைப் போல் படிக்க ஆசை. கொஞ்சம் பாடம் கற்றுக் கொடுங்களேன், என்று ஆதங்கத்தோடு கேட்டார்.திரு வி.க.,வும் அதற்கு ஒப்புக்கொண்டார். மனைவிக்கு பாடம்துவங்கியது. இதைதிரு வி.க.,வின் தாயார்கவனித்து விட்டார்.மருமகளை அழைத்து, ஏண்டி! பொம்பளையா லட்சணமா குடும்பத்தைக்கவனிக்காம, சமையலைப் பண்ணாம.. என்னடி..படிக்க ஆரம்பிச்சிருக்கே! இதெல்லாம் நமக்கு ஆகாது. ஒழுங்கா போய் வேலையப் பாரு, என்றார். அத்துடன், மகனை அழைத்து, இந்த படிப்பையெல்லாம் உன்னோடு நிறுத்திக்கோ! உன் மனைவிக்கு சொல்லிக் கொடுக்கக்கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.ஆனால், திரு வி.க., இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து மனைவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.தன் பேச்சை மதிக்காமல், மனைவிக்கு தொடர்ந்து கற்றுத் தந்த மகன் மீது அம்மாவுக்கு கோபம் தலைக்கேறி விட்டது.இந்தா பாரு! நான் சொல்றதை கேக்கிறதா இருந்தா கேளு! இல்லாட்டி, உன் பெண்டாட்டியைக்கூட்டிகிட்டு தனிக்குடித்தனம் போய், பாடமெல்லாம் சொல்லிக்கொடு. இங்கே இந்த அவலம் நடக்கக்கூடாது, என்று இன்னும் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.உடனே மருமகள் மாமியாரிடம், அத்தை! ஒரு பெண்ணுக்கு படிப்பை விட, குடும்ப மானம் தான் பெரிது. என்னால், இந்த குடும்பத்தின் ஒற்றுமை கெட்டுப் போய் விடக்கூடாது. நான் இத்தோடு படிப்பை நிறுத்திக் கொள்கிறேன், என்று அமைதியாகச் சொன்னார்.பெண்களுக்கு பாடம் மறுக்கப்பட்டது என்ற கோணத்தில் இந்தசம்பவத்தைப் பார்ப்பதை விட, பொறுமை, சகிப்புத்தன்மை, குடும்பத்தை அனுசரித்து செல்லும் விதம்ஆகியவற்றை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. பி.இ., எம்.இ., என படிப்பதை விட,பொறுமையைப் படிக்க வேண்டியது தான்நிஜமான கல்வி. |
|
|
|