|
இந்தக் கதையைப் படித்தால் மரம்மாதிரி நிக்கிறியே என்று இனி யாரையும்திட்ட மாட்டீர்கள். வீட்டிற்குள் நுழைந்தசிறுவனின் ஆடையில் படிந்திருந்த ரத்தக்கறையைக் கண்டு பதறிய தாய்,எங்காவது விழுந்து விட்டாயா? என்று கேட்டாள். கோடரியால் என் காலினை வெட்டிப் பார்த்தேன் என்றான்சிறுவன். நீ என்ன முட்டாளா? எவனாவது தன் காலை தானே வெட்டுவானா? என்று கோபமாக கேட்டாள் தாய். ரத்தம் வழிந்தும், காயம் பெரிதாக இருந்தும், சிறுவன் வலியை உணராமல்நின்றிருந்தான். என்ன வேலை செய்தாய். காயம் இன்னும் சிறிதுஅதிகமாக இருந்தால் உன் காலுக்கே ஆபத்துநேர்ந்திருக்குமே!என்று ஆத்திரத்துடன் வருத்தத்தையும் கொட்டினாள். அம்மா! பூவரச மரத்தின் பட்டையை பெயர்த்து எடுத்தேன். அந்த மரத்திற்கு வலிக்குமோ என்று என் மனம் வருந்தியது.அவ்வலியை நானும் உணர்வதற்காக என் காலையை வெட்டிப் பார்த்து உண்மையை உணர்ந்தேன், என்றான் சிறுவன். அப்போதுதான் தன் பிள்ளையிடம், பூவரசம் பட்டை கொண்டு வரும்படி சொன்ன விஷயம்அம்மாவின் ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மரங்களிடமும், எல்லா உயிர்களிடமும் நம்மிடம் இருப்பது போல் உயிர் இருக்கிறது. நம்மைப் போன்றே எல்லாஉயிர்களுக்கும்உணர்ச்சி உண்டு. பூவரசமரத்தின் பட்டையை உரித்தாலும்அம்மரத்திற்கும் துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்து வருந்தியநீ ஒரு மகானாகவிளங்குவாய்! என்று ஆசிர்வதித்தாள். அச்சிறுவன் தான் நாமு. அவரே பின்னாளில்நாமதேவர் என்றபெயரில் பெரிய மகானாக வாழ்ந்தார். |
|
|
|