Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெரிசும் அதுதான்! சிறிசும் அதுதான்!
 
பக்தி கதைகள்
பெரிசும் அதுதான்! சிறிசும் அதுதான்!

நம் வீட்டில்குழந்தைகளுக்குபெற்றவர்கள் அவரவர் வருமானத்துக்கு ஏற்பஉடைகள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு வரும் சில மாணவர்கள் அதை விட விலை உயர்ந்த ஆடை அணிந்திருப்பர். அதைப் பார்க்கும் குழந்தைகள் வீட்டுக்கு வந்து, அவர்கள் மட்டும் ஆடம்பரஉடையணிந்து வருகிறார்கள். எனக்கு நீங்கள் இப்படி ஒரு உடையை வாங்கிக் கொடுத்து, அவர்கள் முன்னால் தலை குனிய வைக்கிறீர்களே! என்று சொல்வது வாடிக்கை. இப்படிப்பட்டவர்கள் படிக்க வேண்டிய கதை இது. சிவாஜியின் குருராமதாசர். இவருக்குசிவாஜி ஒருமுறைகாணிக்கையாகதங்கக்காசு, முத்து,பவளம் எனவகைவகையாகஅனுப்பி வைத்தார்.அதைக் கொண்டு சென்றவரிடம், ராமதாசர் ஒருதுணியில் கட்டியகைப்பிடியளவு மண்,பத்து பதினைந்துகூழாங்கல், ஒருசிறிய டின்னில்குதிரைச்சாணம்மூன்றையும் கொடுத்து விட்டார். அதைப்பெற்றுக் கொண்டசிவாஜி அப்படியேகண்களில் ஒற்றிக்கொண்டார்.இதைப்பார்த்த,சிவாஜியின் தாய் ஜீஜிபாய்க்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. பார்த்தாயா! சிவாஜி! நீ விலை உயர்ந்த பொருட்களை குரு காணிக்கையாக அனுப்பினாய். அவரோ,குதிரைச் சாணம், மண் இவற்றை பதிலுக்கு கொடுத்து அனுப்பியிருக்கிறாரே! இதுதான் ஒரு குரு சீடன் மீது கொண்ட அன்பா? என்று கொதித்தார்.சிவாஜி அம்மாவைச்சமாதானம் செய்தார்.அம்மா! நீ கோபிக்காதே. குரு எனக்கு இதையெல்லாம் கொடுத்து விட்டதன் மூலம் பெரிய பாடமேசொல்லியிருக்கார்.  அவர் கொடுத்து விட்ட மண், நான் பல தேசங்களை வெல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது. கூழாங்கற்கள் ஒரு பெரிய கோட்டையைக் கட்ட வேண்டுமென்று சொல்கிறது. குதிரைச்சாணம் நான்ஒரு பெரியகுதிரைப் படையைநிர்மாணம் செய்யவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, என்றார்.மகனின் இந்த பதில் கேட்டு அம்மா ஜீஜிபாய் ஆச்சரியப்பட்டு போனார். மலிந்த பொருட்களைக் கூட, நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறுதுரும்பும் பல் குத்தஉதவும் என்ற பழமொழிநம் நாட்டில் பிறந்தது கூடஇதனால் தான். இளைஞர்களே! யுவதிகளே! பெற்றவர்கள் தரும் எளிய பொருட்களைக் கூட,தங்கமாகவும், வைரமாகவும் கருதி போற்றுங்கள்.எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் தகுதியை நிச்சயம் பெறுவீர்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar