|
ஒரு வயதான பிராமணர் ஒருவர் தான் இறக்கும் முன் மாளிகை போன்ற ஒரு வீட்டைக் கட்டிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டிமுடித்தார். சாவை நெருங்கும் இந்த வேளையில் இவர் ஏன் மாளிகை கட்டியிருக்கிறார்? என புத்தர் எண்ணியபோது, அவருக்கு அவர் மீது கருணை பிறந்தது. தமது சீடரான ஆனந்தரிடம் புத்தர், நீ அந்த மனிதனிடம் சென்று நமது நான்கு அரிய உண்மைகளையும் மோக்ஷத்திற்கான எட்டு வழிகளையும் கூறிவிட்டு வா என்று பணித்தார். முதியவர் ஆனந்தருக்கு, தன் பெரிய வீட்டின் அறைகளைக் காட்டினாரே தவிர, அவர் கூறிய புத்தரின் போதனைகள் எதையும் அவர் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. திரும்பி வந்த ஆனந்தர், என் பிள்ளைகள், என் சொத்து என்று கூறிக் கொள்வது முட்டாள்களின் வழக்கம். இப்படிக் கூறுபவன் எதிர்காலத்தின் மாறுதலைச் சிறிதும் அறியாதவன்; தன்னையும் முழுமையாக அறிந்து கொள்ளாதவன் என்றார். சில நாளில், அந்த வயதானவர் இறந்துவிட்டார். அப்போது புத்தர், ஞானிகளுடன் வாழ்ந்தாலும் முட்டாள் உண்மை எதையும் புரிந்துகொள்வதில்லை. கோப்பையிலிருக்கும் பாயசத்தைக் கரண்டியா ருசிக்கிறது! தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் இவர்களால் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொள்ள இயலு<ம்? என்றார். உன்னைப் பற்றி முழுமையாக நீ அறிந்து கொண்டால் இந்த உலகில் உள்ளவைகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். |
|
|
|