|
துறவி ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்பினார். அதற்காக ஈகை உள்ளம் கொண்டோரிடம் நிதி திரட்டினார். இதனை அறிந்த வணிகர் ஒருவர் ஒரு பெருந்தொகையைத் துறவியிடம் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட துறவி, வணிகரிடம் எதுவும் கூறவில்லை. இவ்வளவு தொகை அளித்த தனக்கு துறவி ஒரு பாராட்டோ, நன்றியோ தெரிவிக்கவில்லையே என வணிகர் மிகவும் ஏமாற்றம் அடைந்து, ஐயா நான் மிகப் பெரிய தொகையைத் தந்திருக்கிறேன்.. என்று கூறி இழுத்தார். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட துறவி, அதற்காக நான் உனக்கு நன்றி கூற வேண்டும் என எதிர்பார்க்கிறாயா? என்று கேட்டார். வணிகர் ஆமாம் என்பது போல் தலையாட்டினார். உடனே துறவி அன்பனே நான் எதற்காக உனக்கு நன்றி செலுத்த வேண்டும். ஒரு பெரிய புண்ணிய காரியத்திற்கு உதவும் வாய்ப்பு உனக்குக் கிடைத்ததற்காக நீயல்லவா எனக்கு நன்றி கூற வேண்டும் என்றார் அமைதியாக.
|
|
|
|