|
சீடன் ஒருவன், எல்லாம் விதிப்படி தானே நடக்கும் எனும்போது நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்? என்று குருவிடம் வாதாடினான். அவனிடம் குரு, கடும் வெயிலில் நீ செல்லு<ம்போது எப்படிச் செல்கிறாய்? என்று கேட்க, சீடனும், குருவே கடும் வெயிலில் செல்லும் போது, குடை பிடித்துக் கொண்டு, கால்களில் காலணி அணிந்து கொண்டு, கையில் கொஞ்சம் தண்ணீரும் எடுத்துக் கொண்டு, மரநிழலில் சற்று இளைப்பாறியபடிதான் செல்வேன் என்றான். வெயில் காயும் போது குடை, காலணி, மரநிழல், தண்ணீர் இவை உன்னை சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து எப்படிக் காக்கின்றனவோ அதே மாதிரி, இறைவனிடம் நீ விடாது பிரார்த்தனை செய்து கொண்டே வந்தால், அது உன்னை விதி என்னும் கொடிய வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள உதவும். இறைவழிபாடு, குளிர்தரும் நிழலாகும் என்று சொல்ல, சீடனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். |
|
|
|