|
செல்வந்தர் ஒருவர், காட்டிலிருந்து பலம் வாய்ந்த குதிரை ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தக் குதிரை யாருக்கும் கட்டுப்படவில்லை. எவரும் அதன் மீது ஏற முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார் அவர். செல்வந்தரின் மகன் குதிரையை கவனித்தான். நான் இதை அடக்கிக் காட்டுகிறேன் அப்பா...! என்றான். அது, அதிகாலை நேரம். குதிரையை கிழக்குப் பக்கமாக நிறுத்தி வைத்து, அதன் மீது ஏறினான். குதிரை அவன் சொல்<லுக்குக் கட்டுப்பட்டுப் பாய்ந்து ஓடியது. செல்வந்தருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. யாராலுமே அடக்க முடியாத குதிரையை எப்படியப்பா நீ வழிக்குக் கொண்டு வந்தாய்? என்று வியப்புடன் கேட்டார். மகன் புன்னகைத்தான். அடர்ந்த காட்டிலேயே வளர்ந்ததால் இந்தக் குதிரை தன் நிழலையே பார்த்ததில்லை. இங்கே அது பயந்து தன் நிழலைப் பார்த்துதான். காலையில் கிழக்குப் பக்கம் சூரியன் உதிக்கும் திசையில் நின்றதால் அதன் நிழல் கீழே விழவில்லை. அதனால் குதிரையும் பயப்படவில்லை அவ்வளவுதான் விஷயம். மனமும் அப்படித்தான். நீங்கள் அதை ஆன்மாவை நோக்கிச் செலுத்தினால் அது அமைதியாக இருக்கும். மாயையை நோக்கிச் செ<லுத்தினால் அது குதிக்கும். உதைக்கும்.
|
|
|
|