|
செல்வந்தர் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பி, ஞானி ஒருவரின் அறிவுரை கேட்டு வந்தார். தான் விரும்பும் பெண்ணைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவள் வரதட்சணை ஏதும் தர முடியாது என்றார். ஞானி மணலில் ஒரு பூஜ்யம் போட்டார். ஆனால், நல்ல அழகி என்றார் செல்வந்தர். முதல் பூஜ்யத்துக்குப் பக்கத்தில் இன்னொரு பூஜ்யம் போட்டார் ஞானி. அதோடு அவள் நன்றாக ஓவியம் வரைவாள். அடுத்து ஒரு பூஜ்யம். அவள் குடும்ப பொறுப்பு மிக்கவள். மீண்டும் ஒரு பூஜ்யம் சேர்க்கப்பட்டது. அவளது குடும்பம் இந்த நாட்டிலேயே மிகவும் பழைமையான குடும்பங்களுள் ஒன்று. அடுத்து ஒரு பூஜ்யம் சேர்ந்தது. அவள் மிகவும் பொறுமையும், அடக்கமும் மிக்கவள். இன்னொரு பூஜ்யத்தைச் சேர்ந்தார் ஞானி. அவள் நன்கு படித்தவள், மேலும் ஒரு பூஜ்யம்.
ஓ ! ஒன்றை மறந்து விட்டேனே ! அவள் மிகவும் தெய்வநம்பிக்கை மிக்கவள்.
அதைக் கேட்டதுதான் தாமதம். ஞானி அந்த ஏழு பூஜ்யங்களுக்கு முன்னால் ஒன்று என்ற எண்ணைச் சேர்த்து செல்வந்தரை பார்க்கச் செய்து, நீ விரைவில் அவளைத் திருமணம் செய்து கொள். அவளை நீ பெறுவதற்கு கோடி பெறுவதற்குச் சமம் என்றார் ! |
|
|
|