|
ஞானி ஒருவர் அடிக்கடி தன் சீடர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவது வழக்கம். ஒருநாள் சீடர் ஒருவர், குருவே... மகிழ்ச்சி, துக்கம் என்ற இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் என்ன? என்று கேட்க, விடை எதுவும் கூறாத ஞானி, சீடர்கள் அனைவரையும் ஒரு ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
அது மழைக்காலம். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டு இருப்பதைக் காட்டி, சீடர்களே... இதுபற்றி நீங்கள் நுங்கும் நுரையுமாகக் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் வயல்களுக்கு நிறைய நீர் கிடைத்து, விளைச்சல் பெருகி, நாடு செழிக்கும் என்பதை எண்ண மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்கள். வேறு சிலர் இவ்வெள்ளம் தாவரங்கள், கால்நடைகள், மனிதர்கள் என பலரை அடித்துச் சென்று துன்பம் விளைவிக்கக் கூடும் என்று துயரத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதைக் கேட்ட ஞானி, ஒரே வெள்ளக் காட்சியைக் கண்ட நீங்கள் மகிழ்ச்சி, துயரம் என்ற இரு வேறு நிலைகளை வெளிப்படுத்தினீர்கள். எனவே, மனித மகிழ்ச்சி, துன்பம் என்ற இரண்டிற்கும் காரணம் அவரவர் மனமே என்று விளக்க, சீடர்கள் ஏற்றனர். |
|
|
|