|
குருவிடம் சீடன் ஒருவன், குருதேவா ! கடவுளை வணங்காவிட்டால், அவர் நம்மீது கோபித்துக் கொள்வாரா? குரு சொன்னார், நிச்சயமாக கடவுள் நம்மை கோபித்துக் கொள்ள மாட்டார் ! ரயிலில் தொலைதுõரப் பயணம் மேற்கொண்டிருக்கிறாய். உனக்கு எதிரில் அமர்ந்து ஒருவர் பயணம் செய்கிறார். அவருடன் நீ பேசாவிட்டால், அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது. அனுபவமிக்க அவரிடம் பேசினால், ரயில் எங்கே நிற்கும்? அங்கே காபி கிடைக்குமா? நீ போக வேண்டிய ஊருக்கு எப்போது போய்ச் சேரலாம்? இப்படிச் சில செய்திகளை நீ தெரிந்து கொள்வதால் உனக்குத்தானே பயன் ! கடவுள் என்பவர் உன் வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன் பயணம் செய்யும் ஓர் அனுபவசாலி. அவர் பலர் வாழ்க்கையைப் பல காலமாகப் பார்த்து வருவதால், உனக்குத் தெரிய வேண்டியதை அவரிடம் தெரிந்து கொள்ளலாமே? இப்படித் தெரிந்து கொள்ளும் புதிய அனுபவமே கடவுளை வணங்குவது என்றார்.
|
|
|
|