|
குரு ஒருவர் பந்தம், பாசம் எல்லாம் வெறும் மாயை, மாயை விலகினால் தான் உண்மையைக் காண முடியும் என்று சீடனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். என் மனைவி என் மீது மட்டற்ற அன்பு கொண்டவள். எனக்காக எல்லாம் செய்பவள் என்று சீடன் கூறினான். உறவுகள் அனைத்தும் மரணம் வரையே, கர்ம வினைகள் மட்டுமே உடன் வரும் என்றார் குரு. இதை ஏற்காத சீடன் குரு கூறுவதை சோதித்துப் பார்க்க எண்ணி, வீட்டில் சவம் போல் படுத்தான். உறவுகள், நண்பர்கள் எல்லாம் கூடி ஆகவேண்டிய காரியங்களை பார்க்க ஆரம்பித்தனர். சீடனின் வீடோ குறுகிய வீடு. அதன் வழியே அவனை துõக்கிச் செல்ல முடியாமல் வீட்டின் முற்றத்தை இடிக்க ஒருவன் கோடாரியுடன் வந்தான். அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த சீடனின் மனைவியோ, முற்றத்தை இடித்துவிட்டால் நாங்கள் எங்கு போவது. அவர் கை, கால்களை மடக்கி கட்டி வெளியே எடுத்துச் செல்லுங்கள் என்றாள். இதைக் கண்டு விழிப்படைந்த சீடன், ஒன்றுமே பேசாமல் ஆளை விடு சாமி என்று மனைவியை விட்டு துறவு பூண்டு வெளியே சென்றான். |
|
|
|