|
இறைபக்தி உள்ளவன் அமைதியாக இருப்பது ஏன்? என ஒரு முனிவரைப் பார்த்து ஒருவன் கேட்டான். தம்பி! தேனீயானது பூவுக்கு வெளியே சுற்றிச் சுற்றி வரும் வரையில் பூகம்பம் ஏற்படுவது போல் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். பூவுக்குள் நுழைந்து விட்டாலோ தேனைக் குடித்துக் கொண்டு அமைதியாகி விடும். அதுபோல, பக்தியை ருசி கண்டவரும் அதை உண்ட மாத்திரத்திலேயே அமைதியாகி விடுவார்கள்.. என்று விளக்கினார் முனிவர். |
|
|
|