|
இந்த உலகத்தில் மக்கள் காண்பது எதுவும் உண்மையல்ல; அவை யாவும் அவர்களின் மனம் சொல்கிறபடி கண்கள் காண்கின்ற காட்சிகள்தான் என்றார் ஞானி. இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மையல்ல ! என்றார் அவரைக் காண வந்த பண்டிதர் ஒருவர். ஞானி உடனே அருகிலிருந்த மரத்திலிருந்து இரண்டு நீண்ட குச்சிகளை ஒடித்து, அருகருகே நீள வாக்கில் வைத்து, பண்டிதரிடம் கேட்டார், இது என்ன? அது பதினொன்று தெரியாதா என்ன? நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று தெரியும். பதினொன்று என்ற எண் எதுவும் இல்லை. அது உங்கள் மனதில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கணித வடிவம். இங்கே இருப்பது உண்மையில் ஒரு மரத்தின் இரண்டு உடைந்த குச்சிகள்தான் என்றார் ஞானி. |
|
|
|