|
துறவி கிருஷ்ண போதாஷ்ரம்ஜீ,தன் சீடர்களுடன்குருக்ஷேத்திரம் சென்று கொண்டிருந்தார். அப்போது கோடை காலம். எங்கும் வறட்சி நிலவியது. செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் ஒரு கோயிலையும்,அதனருகில் குளம்ஒன்றினையும் கண்டார்.சூரியனின் கிரணங்கள்அனலாய்த் தகித்தது. தண்ணீர் இல்லாமல் வற்றிய குளத்தில் மீன்கள் சேற்றில் துடித்துக் கொண்டிருந்தன.இரண்டொரு நாளில் இந்த சேறும் காய்ந்து போனால், மீன்கள் மாண்டு விடுமே என்ற துறவி, சீடர்களிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார். சீடர்கள், சுவாமி! நம்மால் என்ன செய்ய முடியும்?இது இயற்கையின்விளையாட்டாயிற்றே!என்றனர். ஊருக்கு வந்திருக்கும்துறவியைக் காண ஊர் மக்கள் கோயிலில் கூடினர். சுவாமி! இங்குமழை இல்லாததால்நீர்நிலையெல்லாம் வற்றி விட்டது. மழை பெய்வதற்கு நீங்கள் ஏதாவது நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். முதலில் நீங்கள்பிற உயிர்களுக்கு கருணை காட்டுங்கள்! அதன் பின்கருணாமூர்த்தியானகடவுளும் உங்களுக்கு கருணை செய்வார்பதிலளித்தார் துறவி. நீங்கள் என்னசொல்கிறீர்கள்? என்று மக்கள் புரியாமல்விழித்தனர்.தண்ணீர் இல்லாமல்உயிருக்குப் போராடும் மீன்கள் பிழைக்கும்வகையில், இந்த குளத்தைதண்ணீரால் நிரப்புங்கள், என்றார் துறவி. உடனே மக்கள் வீட்டில் குடிப்பதற்காக துõரத்துஊர்களில் இருந்துகொண்டு வந்திருந்த தண்ணீரைக் கொண்டு வந்து குளத்தில் கொட்டினர். ஒரு கிணற்றுக்குள் இறங்கி, அடியில் கிடந்த நீரை முகர்ந்து வந்து அதையும் ஊற்றினர். ஓரளவுதண்ணீர் சேர்ந்ததும்மீன்கள் தங்களைஆசுவாசப்படுத்திக் கொண்டன. இந்த வேலை நடந்து கொண்டிருக்கும் போதே,திடீரென காற்று வீசியது. வானில் மேகம் சூழந்தது. மழை பெய்ய ஆரம்பித்தது. மீன் பெற்றுக் கொண்டதை, வானம் பன்மடங்கு மழை நீராக கொடுத்ததை எண்ணிதுறவி கிருஷ்ண போதாஷ்ரம்ஜீ மகிழ்ந்தார்.உயிர்களிடம் இரக்கம் காட்டினால், கடவுள்நம் மீது இரக்கம்காட்டுவார் என்பதைஊர் மக்கள் அனைவரும் உணர்ந்து மகிழ்ந்தனர்.
|
|
|
|