|
இப்படி எதற்குஎடுத்தாலும் விரதம், பூஜை, புனஸ்காரம் என இருந்து விட்டால் என்னை கவனிப்பது யார்? அதெல்லாம் முடியாது... நீ சாமியார் ஆனது போதாதென்று என்னையும் சாமியாராக்கப் பார்க்கிறாயா? உன்னை திருச்செந்துõர் செல்லஅனுமதிக்க மாட்டேன்,என வள்ளியிடம் கோபித்தான் கந்தன். விஷயம் இது தான். கந்தனுக்கு ஆறுமாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. பெண் பார்க்க போன இடத்தில் வள்ளியைப் பற்றி எல்லாரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் புகழ்ந்து பேசினர். குடும்பத்திற்கு ஏற்ற குணவதி. முருக பக்தை. விரதங்களை முறையாக அனுஷ்டிப்பவள்,என்று.கந்தனின் பெற்றோரும் தங்களின் குடிகார மகனை வள்ளி திருத்தி விடுவாள் என்ற நம்பிக்கையில், அவனின்தவறான செயல்பாடுகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டனர்.கந்தன் கள் கலயத்துடன் திரிந்தான். கந்தன் என்ற பெயருக்காகவே திருமணம் செய்து கொண்ட வள்ளி,எல்லாம் முருகன் செயல். அவன் நினைத்தால் இவர் திருந்த எத்தனை நாளாகிவிடும்? என பொறுத்துக் கொண்டாள். இந்நிலையில் கந்தசஷ்டி விரதம் வந்தது. விரதத்தின் முதல் நாள், நான் திருச்செந்துõர் செல்ல வேண்டும். நீங்களும் வாருங்கள். செந்திலாதிபதியை கந்தசஷ்டியை ஒட்டிவணங்கினால் நன்மை கிடைக்கும்.
இந்த ஒருவாரமாவது இந்த குடியை மறந்து விடுங்கள். நமக்குநல்ல காலம் பிறக்கும், என்றாள்.வர மறுத்த கந்தன் வெளியில் புறப்பட்டான்.ஒரு நண்பன் அவனிடம்,டேய்! பத்து ரூபாய்க்கு இரண்டு கலயம் மொந்தை நம்மூர் காட்டுப் பண்ணைக்குள் விக்கிறாங்க. அதைக் குடித்தால் போதையில் மிதக்கலாம், என்றுஆசை காட்டினான். இருவரும் மனம் போல குடித்தனர். சற்று நேரத்தில் இருவருக்கும் மயக்கம் வரும் போல இருந்தது. வாந்தி எடுத்தனர். பயந்து போன பண்ணைக்காரன், கந்தனின் வீட்டிற்கு தகவல் சொல்லி அனுப்பினான்.வள்ளி தன் மாமா, மாமியாருடன் அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாள். உள்ளூர் வைத்தியர் சோதித்தார். அம்மா! இது கொடிய விஷம் கலந்த கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இவர்களை திருச்செந்துõர் பெரிய வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போங்க.இல்லாட்டி உயிருக்குஆபத்து, என்றார். கந்தன் வள்ளியை ஏறிட்டுப் பார்த்தான். ஒரு வண்டியில்இருவரையும் ஏற்றிக் கொண்டு திருச்செந்துõருக்கு சென்றனர்.செந்திலாண்டவா! இவரை காப்பாற்று என துõரத்தில் கோபுர தரிசனம் தெரிந்த உடனேயே வள்ளி அழுதாள். பெரிய வைத்தியர் சோதித்து விட்டு மாற்று மருந்து கொடுத்து விஷத்தை முறித்தார். நல்ல சமயத்திலே கொண்டு வந்தீங்க. முருகன் அருளால் ஆபத்து போயிடுச்சு... ஏம்பா... இப்படி கண்டதை குடிக்கலாமா? இனிமேலாவது திருந்துங்க... திருச்செந்துõரிலே தங்கி சஷ்டி விரதம் இருந்து கெட்ட பழக்கத்தை அறவே விடறதுக்கு வழியைப் பாருங்க,என்றார். அந்த செந்திலாண்டவனே நேரில் வந்து கட்டளையிட்டது போல் இருந்தது கந்தனுக்கு.வள்ளி...நீ சொன்னதை கேட்காததால் அந்த முருகனே என்னை கூட்டி வர இப்படி ஒரு நாடகம் நடத்தி விட்டான். நானும் உன்னோடு சஷ்டி விரதம் இருக்கிறேன். இனி கள்ளை மனதாலும் தொடமாட்டேன்,என்றான்.வள்ளி வெற்றிவடிவேலனை உள்ளம் நெகிழபிரார்த்தித்தாள். |
|
|
|