|
பொய்யாமொழிபுலவர் சோழநாட்டில் வாழ்ந்து வந்தார். சிவனை மட்டுமே வழிபடும் இந்தப் புலவரிடம், முருகன்அடியவர் ஒருவர் சிவன் மகனான முருகன் குறித்து பாடும் படி வேண்டினார். கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாட மாட்டேன் என்று மறுத்து விட்டார் புலவர். சிவனை மட்டும் பாடுவேனே ஒழியமுருகனைப் பாட மாட்டேன் என்பது இதன் பொருள். அடியவரோ, முருகன் நினைத்தால் முடியாததும் உண்டோ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். ஒருமுறை புலவர் மதுரை சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்து பொன்னும், பொருளும் பெற்று சோழநாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் வில், அம்பு ஏந்திக் கொண்டு வேடுவராக முருகன் எதிர் வந்து தோன்றினார்.காட்டுப்பாதையில் பொன், பொருளோடு தன்னந்தனியாகச் செல்லும் நீர் யார்? என்றார் வேடுவர்.திகைத்து நின்ற பொய்யாமொழி, நான் ஒரு புலவர் என்றார்.அப்படியா! மகிழ்ச்சி. என் பேர் முட்டை. அதைக் கொண்டே ஒரு பாட்டுபாடுங்களேன் என்றார்வேடுவர். புலவரும் முட்டை என்னும் சொல் வரும் விதத்தில் பாடினார்.அதைக் கேட்டுச் சிரித்த வேடுவர், கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாட மாட்டேன் என்றீரே! இப்போது குஞ்சை விட உமக்கு முட்டைப் பெரிதாகிப் போனதோ? என்று சொல்லி சுயவடிவத்தைக் காட்டினார். சிவனும் தானும் ஒன்றே என்ற உண்மையை உணர்த்தினார். பொய்யாமொழிப் புலவரும் முருகனை கை கூப்பி வணங்கினார்.
|
|
|
|