|
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில்மணமக்களுக்குஉறவினர்கள், நண்பர்கள் பரிசுப்பொருள்களுடன் வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர்.அங்கு பிரபல நடிகையும், பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின்(கே.பி.எஸ்.,) கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்ததால் கூட்டம்அதிகளவில் கூடியது.கே.பி.எஸ்., வந்ததும், விழாவிற்கு வந்த ரசிகர்களில் சிலர், பூம்புகார் படத்தில் இருந்து பாடல்களைப் பாட வேண்டும் என்று துண்டுச் சீட்டில் எழுதி அனுப்பி தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர்.அதைக் கண்ட கே.பி.எஸ்., தயக்கத்துடன்,உங்களுக்கு என் பணிவான வணக்கம். இங்குள்ளஅனைவருக்கும் பூம்புகார் கதை நன்றாகத் தெரிந்திருக்கும். அதில் வரும் கதைத்தலைவன் கோவலன்பற்றியும், அவனது மனைவி கண்ணகியின் வாழ்வுபற்றியும் நன்கு அறிந்து இருப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும் இந்த இனிய வேளையில் மணமக்களை வாழ்த்தும் விதத்தில் பக்திபாடல்களைப் பாடுவது தான் பொருத்தமானதுஎன எண்ணுகிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்காக பூம்புகார் பாடல்களைப் பாடுவேன். இருப்பதை எல்லாம் நமக்கு அளித்து விட்டு, தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாத என் அப்பன் பழநி முருகனின் அருளால், மணவிழா காணும் இந்த கண்மணிகள் நுõறாண்டு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று வாழ்த்தினார். திருவிளையாடல் படத்தில் தான் பாடிய பழம் நீயப்பா! ஞானப்பழம் நீயப்பா என்னும் பாடலைப் பாடத் தொடங்கினார்.இடம், சூழ்நிலை அறிந்து பாடிய கே.பி.எஸ்.,ன் பெருந்தன்மையை அறிந்து,அங்கிருந்த அனைவரும்கரவொலி எழுப்பிஆரவாரம் செய்தனர்.
|
|
|
|