Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பே! ஆருயிரே!
 
பக்தி கதைகள்
அன்பே! ஆருயிரே!

மனைவி மீது கோபம் வரும் போதெல்லாம் அவளைப் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் இதே பார்! நான் சந்நியாசி ஆகி விடுவேன் என்று சொல்லிப் பயமுறுத்தி வந்தான். ஆனால், அவளோ அவன் கூறுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.ஒருநாள் வழக்கம் போல தன் பல்லவியைத் தொடர்ந்தான். அவளும்,நீங்கள் ஒன்றும் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்கள் முடிவுக்கு நான் குறுக்கே  நிற்க மாட்டேன். தாராளமாக இப்போதே சந்நியாசிஆகலாம், என்றுபடபடவென பேசினாள். மனைவி இப்படி பேசுவாள் என கணவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வேறுவழியின்றி துண்டை உதறித் தோளில் போட்டபடி கால் வந்த திசையில் நடந்தான். அங்கிருந்த கோயிலில் மொட்டையடித்து ஆற்றில் குளித்தான். காவி உடை அணிந்து கொண்டான். ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தான். ஒரிரு மணி நேரம் ஆனதும், பசி உண்டானது. போவோர் வருவோரைப் பார்த்தான். யாரும் சாப்பிட ஏதும் தரவில்லை. ஏதோ புதிய சாமியார் ஒருவர் ஊருக்கு வந்திருக்கிறாரே! என்று சொல்வது போல அங்கிருந்த மக்களின் பார்வை மட்டுமே இருந்தது.

மாலை நேரமாகி விட்டது. பசியோடு பயமும் தொற்றிக் கொண்டது. இரவில் கோயில் நடை சாத்தியதால் அந்த பகுதியே அமைதியானது. ஒருவர் கூட அவன் கண்ணில் தென்படவில்லை. பயம் அதிகரித்தது. இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல என்று வீட்டுக்குப் புறப்பட்டான்.நன்றாக இருட்டியதால் பாதையில் இருந்த மேடு, பள்ளம் கண்ணுக்குத் தெரியவில்லை. பசியால் நடையும் தள்ளாடியது. நடுஇரவில் தன் சொந்த ஊருக்கு வந்தான். மொட்டைத் தலையுடன் வந்த இவனைக் கண்டதும் நாய் குரைக்கத் தொடங்கியது. உடம்பெல்லாம் வியர்த்துப் போனது. பயத்தில் தன்னையும் மறந்து ஓடோடி வந்து வீட்டுக்கதவைத் தட்டினான்.யார் அங்கே? என்று உள்ளிருந்து மனைவியின் குரல் கேட்டது.நான் தான் வந்திருக்கிறேன் என்றுபதில் கொடுத்தான்.கணவரின் குரல் என்பதை அறிந்த மனைவி கதவைத் திறந்து விட்டாள். கணவரின் கோலத்தைக் கண்டதும் பலமாகச் சிரித்தாள். இது சந்நியாசி தங்கிற இடம் இல்லை. ஏதாவது ஆஸ்ரமத்திற்குச் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்றாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்ட கணவன்,அன்பே! என் ஆருயிரே! அறியாமல் பிழை செய்த என்னை புண்படுத்தாதே! நான் விளையாட்டாகச் செய்ததை உண்மை என எண்ணி பெரிதுபடுத்திக் கொள்ளவேண்டாம். காலையில் நீ அளித்த உணவைசாப்பிடாமல் போய்விட்டேன். இப்போதோ பசிமயக்கத்தால் உடல் சோர்ந்து விட்டது.இனி கனவில் கூட சந்நியாசத்தைப் பற்றி நினைக்க மாட்டேன். என்னை ஏற்றுக் கொள், என்று கெஞ்சினான். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்பதை உணர்ந்த கணவன் மீது மனைவிக்கும் இரக்கம் உண்டானது. தாழிட்ட கதவைத் திறந்து வீட்டுக்குள் அனுமதித்தாள்.சந்நியாசம் என்பது விளையாட்டு அல்ல. குடும்ப பிரச்னைக்கு அது தீர்வும் அல்ல. ஆசைகளைத் துறப்பதே உண்மையான துறவு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar