|
சிவபெருமான் நெற்றிக்கண்ணை எப்போது திறப்பார்... கோபம் வந்தால் திறப்பார் என்று படித்திருக்கிறோம். அவர் இறையனார் என்னும் புலவராக வந்து, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறியெயிற்று அரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே என்று அவர் ஒரு பாடல் பாடினார்.பெண்களுக்கு இயற்கையிலேயேகூந்தலில் மணம் உண்டு என்பது இந்தப்பாடலின் கருத்து.பாண்டியநாட்டின் தலைமைப்புலவர் நக்கீரர் இதை மறுத்தார். அதனால், கோபம் கொண்ட சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார் என்று திருவிளையாடல் புராணத்தில் படித்திருக்கிறோம். ஆனால், தத்துவார்த்த ரீதியாக நெற்றிக்கண் என்பது பல கருத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. அவரது நெற்றிக்கண் அறிவுக்கும்,ஆன்மாவுக்கும் சம்பந்தம் உடையது. சிவன் தன் நெற்றிக்கண்ணால் தான் காமனாகிய மன்மதனை எரித்தார். காமன் என்பவன்விருப்பங்களைத் துõண்டக்கூடியவன்.மனிதனுக்கு காமத்தைத் துõண்டுவது எது? மனம்...! விருப்பங்கள் அடங்கினால் தான், இறைவனை அடைய முடியும். அப்படியானால் மனதை நாம் எரிக்க வேண்டும். எப்படி எரிப்பது! சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தால், எதிரேயுள்ள பொருள் எப்படிபஸ்பமாகுமோ அப்படி எரித்து விட வேண்டும்.அதே நெற்றிக்கண்ணிலிருந்து தான்ஞானவானான முருகன் பிறந்தார்.அசுரர்கள் மீதுள்ள கோபத்தில் தான் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். ஆனால்,அந்தக் கோபக்கனலில் உதித்தவர் தான்முருகன். அவர் ஞானத்தைத் தரக்கூடியவர். ஆசைகளை வேரறுத்தால் ஞானம் வரும். ஞானம் என்றால் என்ன? இறைவனே உண்மைப் பொருள் என்று உணருவது.இனியேனும், நெற்றிக்கண்ணைக் கோபக்கண்ணாகப் பார்க்காதீர்கள்! ஞானக்கண்ணாக பாருங்கள். நெற்றியில் தான், இதயத்தில் எழும் எண்ணங்களும்,அறிவுப்பார்வையும் கூடுகிறது.ஆக, நெற்றிக்கண் என்பது பார்க்கும் கண்களைப் போல் சாதாரணமானதல்ல, அது அறிவுக்கண். அந்தக்கண்கள் அவசியமானது. இனி ஆளுக்கொரு நெற்றிக்கண்ணுடன் திரிவோமா! |
|
|
|