|
நிர்வாகத் திறமைமிக்க மன்னன் போஜராஜன் தர்மம் செய்யும் எண்ணம் இல்லாதவனாக இருந்தான். ஒருநாள் மன்னன் நகர்வலம் வரும் போது, கோவிந்தன் என்னும் அந்தணர் தெருவில் வந்து கொண்டுஇருந்தார். போஜன் அவரிடம் ஆசிர்வாதம் பெறும்எண்ணத்துடன் தேரை விட்டுக் கீழிறங்கி, கைகளை குவித்து வணங்கினான். ஆனால், அந்தணரோ தன் கண்களை மூடிக் கொண்டார்.என் நமஸ்காரத்தைஏன் இப்படி அலட்சியப்படுத்துகிறீர்கள்? என்றுஅவரிடமே கேட்டான் மன்னன். காரணம் இருக்கிறது மன்னா! அந்தணனான எனக்கு உங்களால் ஒருதுன்பமும் நேராது.இருந்தாலும்,கற்ற வித்தையைபிறருக்கு சொல்லிக் கொடுக்காதவனும், கோழையிடம் உள்ள உடல் பலமும், தானம் அளிக்க மனம் இல்லாதசெல்வந்தனும் யாருக்கும் பயன் அளிக்கப்போவதில்லை. அந்த வகையில் உன்னைப் பார்ப்பதே பாவம் என்பதால் கண்களை மூடிக்கொண்டேன் என்றார் அந்தணர்.ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக முகஸ்துதியாக பாராட்டுபவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள். ஆனால், தங்களைப் போல உண்மையை தைரியத்துடன் வெளிப்படுத்துபவர்கள்ஒரு சிலரே உள்ளனர். என் அறிவுக்கண்ணைத் திறந்த உங்களுக்கே முதலில் தானம் செய்யப் போகிறேன், என்றான் போஜராஜன்.அந்தணருக்கு பொன்தானமும் அளித்தான்.மன்னன் மனம் திருந்தியதால், அந்தணரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றார். தொடர்ந்துதானமும் செய்தான்.
|
|
|
|