|
போஜராஜன் அவையிலிருந்த ராஜகவி, ஒருநாள் பகலில்தெருவில் சென்று கொண்டு இருந்தார். வழியில் ஒரு முதியவர் செருப்பு அணியாத காலுடன் அவசரமாகச் செல்வதைக் கண்டார். சூடு தாங்காமல்அவரின் பாதம் நோவதைக் கண்ட கவிக்கு மனம் பொறுக்கவில்லை. தன் செருப்பைக் கொடுத்து, அணிந்து கொள்ளும்படி வேண்டினார். முதியவர் மறுக்கவே, ஐயா! நான் வயதில்இளையவன். என்னால் வெயிலை தாங்கிக் கொள்ள முடியும்! உங்களால் தாங்க முடியுமா? என்ற கவி அவரிடம் செருப்பைக் கொடுத்து விட்டு கடும் சூட்டில் நடந்தார். அப்போது அரண்மனை பாகன், பட்டத்து யானையுடன் அங்கு வந்தான். செருப்பின்றி நடந்த அவரை, யானையில் ஏற்றிக் கொண்டான். ராஜகவி யானையில் வந்த வழியில், போஜராஜன் தன் ரதத்தில் வந்து கொண்டிருந்தான். ராஜகவியைக் கண்டதும், கவிஞரே! எப்படி உமக்கு யானை சவாரி கிடைத்தது? என கேட்டான். மன்னா! தானத்தின் மகிமை தான்! என்றார்.அப்படி என்ன தானம் செய்தீர்கள்? என்றான் போஜன்.என் பழைய செருப்பை ஒரு முதியவருக்கு தானம் கொடுத்தேன். அதன் பலனாக பட்டத்துயானையில் ஏறி சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்தது என்றார் ராஜகவி. தானத்தின் பலன் கைமேல் கிடைத்ததை அறிந்த போஜராஜனும் மகிழ்ந்தான். |
|
|
|