|
ஒரு கிராமத்திற்கு மகான் ஒருவர் பல்லக்கில் வந்து சேர்ந்தார். கிராம மக்கள் அவரை வரவேற்று அன்புடன் உ<பசரித்தனர். அவர் மக்களுக்கு ஆசியளித்தார்.அங்கே சில குழந்தைகள் நின்று உள்ளூர் அம்மனைக் குறித்து கும்மிப்பாட்டு பாடி ஆடிக்கொண்டிருந்தனர். அந்தக் குழந்தைகள் எல்லாருமே பரம ஏழைகள் என்பது, அவர்களது உடைகளைப் பார்த்தாலே தெரிந்தது. மகான் அந்தக் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.சீடர்கள் சிலர் மகானிடம் சென்று, “குருவே! பக்கத்து ஊர் கோயிலில் நமக்கு பூஜைஇருக்கிறது. முக்கியஸ்தர்கள் காத்திருக்கிறார்கள். நம் நிகழ்ச்சி நிரல்படி, நாம் இப்போது அங்கு இருக்க வேண்டிய நேரம். இப்போதே புறப்பட்டால் தான், நாம் இன்னும் ஒரு மணிநேரத்திலாவது அங்கே இருக்க முடியும், கிளம்பலாமா?” என்றனர்.மகான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஒரு சீடரை அழைத்து அவரது காதில் ஏதோ சொல்லி அனுப்பி விட்டு, குழந்தைகளைத் தொடர்ந்து பாடச் சொல்லி ரசித்துக் கொண்டுஇருந்தார். சற்றுநேரத்தில், அந்த சீடர் ஒரு துணி மூட்டையுடன் வந்தார். அதில் குழந்தைகளுக்கான ஆடை இருந்தது. அதைஅவர்களுக்கு அளித்தார். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டனர்.இதன்பிறகு, ஒரு சீடர்,“இப்போதாவது பூஜைக்கு கிளம்பலாமா?” என்றார்.“அதுதான் இங்கேயே பூஜை முடிந்து விட்டதே சீடனே!கற்பூரம் காட்டுவதும், துõபமிடுவதும் பூஜை அல்ல சீடனே! ஏழைகளுக்கு உதவுவதேநிஜமான பூஜை” என்றார் குரு. |
|
|
|