|
அந்த நகரத்தில் இருந்தபெருமாள் கோயிலில், சொற்பொழிவாளர் ஒருவர் கீதை பற்றி பேசிக்கொண்டிருந்தார். எல்லாரும் ரசித்துக் கேட்டனர்.கீதையிலுள்ளதத்துவங்கள் பற்றிவிலாவாரியாகவிவரித்ததை அனைவரும் பாராட்டினர். சொற்பொழிவு முடிந்ததும் அவர் மக்களை நோக்கி,நான் சொன்ன கீதாசாரம் எல்லாருக்கும் புரிந்ததா? சந்தேகம் இருந்தால் கேளுங்கள், என்றனர்.ஒவ்வொருவராக எழுந்து, தங்கள் சந்தேகங்களைச் சொல்ல, சொற்பொழிவாளர் அவர்களுக்கு புரியும் வகையில் மிகஎளிமையான விளக்கங்கள் அளித்தார். ஒரே ஒரு நபர் மட்டும் பேச முடியாமல்விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தார். அன்பரே! எல்லாரும்சந்தேகம் கேட்டார்கள். விளக்கம் சொன்னேன். நீங்கள் ஏதும் கேட்காமல் அழுது கொண்டிருக்கிறீர்களே! ஒருவேளை, ஏதுமே புரியாமல் அழுகிறீர்களோ! என கேட்டார் சொற்பொழிவாளர்.அதற்கு அந்த நபர்,எனக்கு தங்கள் பேச்சில் ஏதும் சந்தேகம் இல்லை ஐயா! அர்ஜுனன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கண்ணன் கழுத்தைத் திருப்பித் திருப்பி பதில் சொன்னான் இல்லையா! அப்போது, அவனுக்கு கழுத்து எப்படி வலித்திருக்கும்? அதை நினைத்தேன்! அழுகை வந்து விட்டது! என்றார். ஆகா! கண்ணன் சொன்ன தத்துவங்களை விட, கண்ணன் மேல் கொண்ட பாசத்தால் கண்ணீர் விட்ட இவரல்லவா நிஜபக்தர், என்று பாராட்டிய சொற்பொழிவாளர், அந்த பக்தரை அன்போடு தழுவி தேற்றினார். |
|
|
|