|
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருகுலத்தில் பாடம் எடுத்தார் துரோணாச்சாரியார். ஒருமுறை அவர்களிடம்,உங்கள் இரு அணியினரையும் சந்திக்க நான் நாளை வருவேன். அப்போது உங்கள் மாளிகைகள் பரிபூரணமாக நிறைந்திருக்க வேண்டும் என்றார். துரியோதனன் தன்சகோதரர்களுடன் ஆலோசித்தான். மாளிகை நிறைந்திருக்க வேண்டும் என்றால், யாரும் மாளிகைக்குள் நுழையமுடியாத அளவுக்குபொருட்களைக் கொண்டு நிரப்புவது என்றுமுடிவெடுத்தான். மாளிகை முழுவதையும் பஞ்சால் நிறைத்தான். அங்கு சென்ற துரோணர், சரியான முறையில் உன் மாளிகையை நிறைத்திருந்தாய்! என்று பாராட்டிவிட்டு, பாண்டவர்கள் மாளிகைக்கு சென்றார்.பாண்டவர்கள் அவரை, பன்னீர் தெளித்து வரவேற்றனர். வீடு முழுவதும் தீபங்கள் எரிந்தன. மாளிகை முழுவதும் ஒளி நிறைந்துஇருந்தது. தர்மரிடம் துரோணர்,உன் வீட்டை நிறைத்து வை என்று சொல்லியிருந்தேனே. நீ அப்படி செய்ததாகத் தெரியவில்லையே, என்றார். குருவே! என் மாளிகை முழுவதையும் இந்த விளக்கின் ஒளி பரிபூரணமாக நிறைத்திருக்கவில்லையா? என்று திருப்பிக்கேட்டார்.தர்மரின் சமயோசிதமான பதிலால் குருவின் உள்ளம் நிறைந்தது. |
|
|
|