|
பார்வையற்ற ஒருவர் கல்லுõரியில் படித்தவர். பெங்களூர் டிவியில் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒன்றரை லட்சம் ருபாய் பரிசு பெற்றவர்.ஒருமுறை தன் நண்பரின் நண்பரானநாராயணனை அவர் பார்க்க நேர்ந்தது. அவர் நாராயணனிடம்,நான் சுயமாகசம்பாதிக்கிறேன். எல்.ஐ.சி. யில் முகவராகஇருக்கிறேன். அதில் வரும் கமிஷனில்என்னுடைய செலவுகள் எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன், என்று சொன்னார். நாராயணன் அவரிடம், அவரது பார்வைக் குறைபாடு குறித்து விசாரித்தார். அப்போது பார்வையற்றவர் சொன்ன பதில் நாராயணனை வியப்பில் ஆழ்த்தியது.சார்! நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மட்டும் பார்க்கிறீர்கள். ஆனால், என்னால் எப்பொழுதும் பார்க்க முடியும். நீங்கள் கண்களால் பார்க்கிறீர்கள். நான் உங்களை என் இதயத்தில் இருந்து பார்க்கிறேன், என்றார்.அவரது இந்தப்பேச்சை நாராயணன் ரசித்தார். கண்ணிருந்தும் குருடனாக இருந்த நாராயணனை அவரது பேச்சு ஒரே நிமிடத்தில் மாற்றி விட்டது. உலகத்தை இருதயக் கண் மூலம் பார்க்க வைத்தவர் அந்த பார்வையற்றவர்.அவர் சென்றதும், நாராயணனன் புத்தக அலமாரியில் இருந்த சாணக்ய நீதி புத்தகத்தை கையில் எடுத்தார். கண் இல்லாதவர்களை பற்றி, சாணக்கியர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா... பார்க்கலாம்... என்று பக்கங்களைப் புரட்டினார். அவரது கண்கள் ஒரு ஸ்லோகத்தின் மீது பதிந்தது. ந பஸ்யதி ச ஜன்ம அந்த:காம அந்தோ ந ஏவ பஸ்யதி!ந பஸ்யதி மத உன்மத்த: ஸ்வார்த்தி தோஷான் ந பஸ்யதி!!
முதல் வரியின் விளக்கம்: பிறவியிலேயே பார்வையற்றவர்களுடைய கண்களால் மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாது. அதனால், இவர்கள் மற்றவர்கள் மேல் தவறான எண்ணம் அல்லது தப்பெண்ணம் கொள்வதில்லை. அடுத்த வரியின் விளக்கம்: பார்வை இருந்தும், பார்வையற்றவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள்அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அவற்றை எப்படி அடைவது என்று மட்டுமே சிந்திக்கிறார்கள். மற்ற விஷயங்கள் அவர்கள் கண்ணுக்குத் தெரியாது. மூன்றாம் வரியின் விளக்கம்: அகங்காரம், ஆணவம், தற்பெருமையில் மயங்கி கண் தெரியாத பலர் நம்மிடையே உள்ளார்கள். இவர்கள் தன்னைத் தவிர எவரையும் பார்க்க மறுப்பவர்கள்.கடைசி வரியின் விளக்கம்: மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கண்ணுள்ள குருடர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் பிறர் நலம் கருதாதவர்கள். மற்றவர்கள் தங்கள் எதிரே இருப்பதையே மறந்து விடுபவர்கள்.இப்படி பார்வை இருந்தும் போலி வாழ்வுவாழ்பவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வழி இருக்கிறதா? இருக்கிறது.... இவர்கள் எல்லாருமே இதயக்கண் மூலம் மற்ற ஜீவராசிகளை நோக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான், கண்ணிலே அன்பு வரும். கல்லில் மட்டுமல்ல, எல்லார் முகத்திலும் தெய்வத்தன்மை தெரியும். |
|
|
|