|
இப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு நேர்கின்றதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன். தீயோர்களைத் தண்டித்து, நல்லோர்களைக் காப்பேன் - இது கீதைநாயகன் கண்ணன் வாக்கு. தெய்வம் மனித வடிவில் வரும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். அந்தவாக்குகளை மெய்ப்பிக்கும் சம்பவத்தைக் கேளுங்கள்.எந்த நேரமும் கண்ணனின் நினைவு. அதன் விளைவாக ஆட்டம், பாட்டம், பஜனை என்று வாழ்ந்த உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு கண்ணனே நேரில் அவருக்கு அவ்வப்போதுகாட்சியளித்து வந்தார்.பக்தியில் லயித்த அக்ராஜி, ஆதரவற்ற ஒரு சிறுவனை வளர்த்து வந்தார். அவரது பெயர் நாபாஜி. அக்ராஜியின் மடத்தில் நடக்கும் பஜனை, அங்கு வரும் மகான்களின் உபதேசங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் நாபாஜி சிறந்த பக்தராக விளங்கினார். ஒருநாள்... அக்ராஜி பூஜைகள் முடித்து நிஷ்டையில் அமர்ந்தார்.வழக்கமாக தரிசனம் தரும் கண்ணன் அன்று நீண்டநேரமாக வரவேயில்லை.அக்ராஜியின் மனதில் கவலை உண்டானது. என் பக்தியில் குறை வந்து விட்டதா? நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனோ? எனக் கண் கலங்கினார்.அருகில் இருந்த நாபாஜி மெல்ல நெருங்கி வந்து,குருதேவா! உங்கள் பக்தியில் எந்தக் குறையும் இல்லை. ஒரு பெரும் வியாபாரியின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த வியாபாரி உங்கள் மீது பக்தி கொண்டவர். தன்னைக் காப்பாற்றினால், தன் பொருளில் கால் பங்கை இந்த மடத்திற்கு அளிப்பதாகபகவானிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற கிருஷ்ணர் அங்கு போயிருக்கிறார். அதனால் தான் இன்று அவர் உங்களுக்குத்தரிசனம் தரவில்லை, என்றார். சற்று நேரத்தில் பகவான்தரிசனம் தந்து, நாபாஜி சொன்ன அதே விஷயத்தையேதாமதத்திற்கான காரணமாகச் சொன்னார். அக்ராஜிக்கு வியப்பு மேலிட்டது. நாபாஜியை புகழ்ந்து பாராட்டினார்.நாபாஜியோ, உங்களுக்கு அடியேன் செய்த பணிவிடைகளாலும், தாங்கள் அளித்த ஆசியாலும் தான் கிருஷ்ணரின் அருள் எனக்கு கிடைத்தது என்று பணிவுடன் பதிலளித்தார். அவருடைய உத்தரவுப்படி நாபாஜி எழுதியது தான்பக்த விஜயக் கதைகள்பாண்டுரங்கனின் புகழ்பாடும் அந்த நுõல் உருவாகக்காரணம்....துõய்மையான பக்தி, கருணை, குருபக்தி, குருசேவை ஆகியவையே. நம்மையும் நல்வழியில் வழிநடத்தும்படி அந்த பரம்பொருளையே வேண்டுவோம். |
|
|
|