|
ஒரு துறவி தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆசியளித்துக் கொண்டிருந்தார். கடவுள்இருக்கிறார் என்பதில் சந்தேகம் கொண்ட ஒருவர் அவரிடம் தயங்கிய படி, கடவுள்இருக்கிறாரா இல்லையா? என்று கேட்டார்.உற்றுப்பார்த்த துறவி,முதலில் உட்காரலாம். பிறகு நாம் பேசுவோம் என்றார்.என் சந்தேகத்தை தீர்த்தால் மட்டுமே உட்காருவேன் என்று சொல்லி விட்டு நின்று கொண்டேயிருந்தார் வந்தவர்.எதிரில் இருந்த நாற்காலியைச் சுட்டிக் காட்டிய குருநாதர்,உட்கார்ந்தால் சந்தேகம் தீர்ந்து விடும், என்றார்.வந்தவரும் ஆர்வமுடன் நாற்காலியில் உட்கார்ந்தார்.முதலில் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல் என்ற குருநாதர், இப்போது அமர்ந்திருக்கும் நாற்காலி உமக்கு இடப்பக்கம் உள்ளதா? வலப்பக்கம் உள்ளதா? என்று கேட்டார்.என்ன கேள்வி கேட்கிறீர்கள்? நாற்காலி என்றால் அதன் நடுவில் தானே உட்காரமுடியும் என்றார் அவர். இதைப் போலத் தான் நீங்கள் கேட்கும் கேள்வியும் அர்த்தமில்லாதது. நமக்கு அப்பாற்பட்ட சக்தி தான் உலகத்தை இயக்குகிறது. அதையே கடவுள் என்கிறோம். இந்த உலகமே அதன் படைப்பு தான். நம்முடைய ஒவ்வொரு அசைவும் அவரது ஆணையின் படியே நடக்கிறது, என்றார். தெளிவு பெற்ற மனிதர் துறவியின் காலில் விழுந்து வணங்கினார்.
|
|
|
|