|
ஒரு சமயம் கோரக்க சித்தர், தன் குருநாதர் மச்சேந்திரருடன் மலைநாடான கேரளாவில் இருந்துதமிழகம் வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் தென்பட்டது. அங்கிருந்தவர்களிடம், இங்கு திருடர் பயம் உண்டா? என்றார் மச்சேந்திரர். பயப்படாதீர்கள். இதுபாதுகாப்பான இடம் தான்! என்று அவர்கள் சொல்லவும், தன்னிடம் இருந்த பையை வைத்து விட்டு நீராடக் கிளம்பினார். அவர் சென்றதும், கோரக்கர் குருநாதரின் பையைத் திறந்து பார்த்தார். அதில் தங்கப்பாளம் ஒன்றுதகதகவென ஜொலித்தபடி இருந்தது. அதை எடுத்துகுருநாதருக்குத் தெரியாமல் குளத்திற்குள் வீசி விட்டு மண் ஓட்டை எடுத்து பைக்குள் வைத்து விட்டார்.அதன்பின் சீடரும் நீராடி விட்டு, இருவருமாக பயணத்தை தொடர்ந்தனர். வழியில் தென்பட்ட ஊரில் தங்க நேர்ந்தது. அங்கிருந்த மக்களிடம் வழக்கம்போல மச்சேந்திரர், இங்கு திருடர்பயம் உண்டா? என்று கேட்டார்.குருவே! மடியில் கனம் இருந்தால் தானே வழியில்பயமிருக்கும். துறவியான நமக்கு எதற்கு தங்கம்? இனி தங்களுக்குப் பயம் தேவையில்லை! என்றார் கோரக்கர்.திடுக்கிட்ட மச்சேந்திரர் தன் கையிலிருந்த பையைத் திறந்தார். அதில் மண் ஓட்டைக் கண்டு, சீடர் மீது கோபம் கொண்டார். குருவிடமே திருடிய நீ எனக்கு சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய். என்னை விட்டுப் போ! என்று கத்தினார்.குருவை வணங்கிய கோரக்கர், என்னை மன்னித்து விடுங்கள். தங்களுக்குத் தங்கம் தானே வேண்டும். இதோ வேண்டியதை வைத்துக் கொள்ளுங்கள்! என்று சொல்லி அருகில் இருந்த குன்றின் மீது சிறுநீர் கழித்தார். குன்று முழுவதும் பொன் மலையாக மாறி விட்டது. தங்கத்தையும், மண் ஓட்டையும் ஒன்றாகவேகருதிய சீடரைக் கண்ட குருநாதர் தலைகுனிந்தார். |
|
|
|