|
இந்த மனிதர்களிடம் எத்தனைதான் நற்போதனைகளை எடுத்துச் சென்னாலும், கடைப்பிடிக்காதவர்களாய் இருக்கின்றார்கள். ஆகவே, இனி நான் மவுனமாகவே இருந்துவிடப் போகிறேன் என்று தன் சீடனிடம் கூறினார் கன்ஃபூசியஸ். குருவே! நீங்கள் இப்படி மவுனமாக இருந்து விட்டால், மற்றவருக்கு எதையும் உபதேசிக்கவே முடியாமல் போய்விடும். அது மட்டுமல்லாமல் நாங்கள் எதையும் தங்களிடமிருந்து கற்க முடியாதவர்களாய் ஆகிவிடுவோமே? என்று கேட்டார் சீடர். அதற்கு கன்பூசியஸ் சொன்னார்: ஆகாயம் பேசுகிறதா? இல்லையே! என்றாலும், பருவ காலங்கள் தவறாமல் வந்து கொண்டுதானே இருக்கின்றன. மேலும் அதில் வெவ்வேறான விஷயங்களும் சிருஷ்டிக்கப்படுகின்றன. அப்போதெல்லாம் வானம் பேசிக் கொண்டா இருக்கிறது? இதைக் கேட்ட சீடன் மவுனமானான். |
|
|
|