Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எது பக்தி?
 
பக்தி கதைகள்
எது பக்தி?

பூலோகத்தில் ஒரு தெருவில் செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் வசித்து வந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தன் கடையில் ஓர் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து வணங்கி வந்தார். செல்வம் இல்லா விட்டாலும் சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் இருந்து வந்தார். செல்வந்தரோ தினம் பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்து வந்தாலும், பல தலைமுறைக்குக் காணும் அளவு செல்வம் இருந்தும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். ஒருநாள் நாரதர் விஷ்ணுவைப் பார்த்து, அந்த செல்வந்தர் சிறந்த பக்திமானாக இருக்கிறார். தினம் பூஜை புனஸ்காரம் என்று இருக்கிறார். அவர் நிம்மதியாய் வாழ ஏதாவது வழி செய்யக் கூடாதா? என்று கேட்டார். விஷ்ணுவும் சம்மதித்து அவரிடம்,

நீ பூலோகத்துக்குச் சென்று, நான் நாராயணனிடமிருந்து வருகிறேன் என்று கூறு. அதற்கு அவர் தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என கேட்பார். நீ அவர் தற்போது ஒரு ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார் எனச் சொல் என்று கூறி பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார். அப்படியே மறக்காமல் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடமும் சென்று விட்டு வாரும் என்றார். நாரதரும் முதலில் செல்வந்தர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நீங்கள் யார்? என்று செல்வந்தர் கேட்க, தான் நாராயணனிடமிருந்து வருவதாகக் கூற, தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என அவர் கேட்க, விஷ்ணு கூறியபடியே நாரதரும் கூற அதற்கு அந்த செல்வந்தரோ, அது எப்படி முடியும்? இது நடக்கிற காரியமா? எனச் சிரித்தார். அடுத்து அந்தச் செருப்புத் தொழிலாளியை பார்க்கச் சென்றார் நாரதர். அவரிடமும் இந்த சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசியாக பதிலுக்கு அந்த செருப்புத் தொழிலாளி, இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தைச் சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தையே தன் வாயில் காண்பித்தவர்... அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா? என்று பதிலளித்தார்.

இதனை அப்படியே நாராயணனிடம் வந்து சொன்ன நாரதரிடம் கடவுள் பக்தி என்பது பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தைப் பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி இப்பொழுது தெரிகிறதா ஏழையின் நிம்மதிக்குக் காரணம் என்ன என்று என்றார் நாராயணர். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்துவிடுகிறதோ அதுபோல் கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற பரமாத்மாவினிடத்தில் தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்குக் காரணமே இருக்கக்கூடாது. பக்தி செய்கிறேன் செல்வத்தைக் கொடு என்று வியாபாரமாக்காமல், மனத்தூய்மையுடன் உண்மையான பக்தி செலுத்தினால் நாம் எப்போதும் கடவுளருகிலேயே இருக்கலாம். நிம்மதியான, நிறைவான வாழ்க்கையும் வாழலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar