|
ஒரு நாட்டின் ராணி மிகச்சிறந்த ராமபக்தை. ஆனால் ராஜாவோ தேச விஷயங்களில் தான் கவனம் செலுத்துவார். ஒருநாள் ராணி ராஜாவிடம் ஒரு நாளாவது என்னுடன் ராமர் கோயிலுக்கு வருவீர்களா! என்று கேட்டாள். ராஜா மறுத்து விட்டார். ராணி வருத்தத்துடன் கோவிலுக்கு போய்விட்டாள். அன்று இரவில் ராஜா உறக்கத்தில் ராமா... ராமா...ராமா...” என்று சொல்லிக் கொண்டிருந்தார். விழித்துக் கொண்ட ராணி, ராஜா இப்படி ராமநாமம் சொல்வதைக் கேட்டு மகிழ்ந்தாள். மறுநாள் ஊரெங்கும் விழாக் கொண்டாட உத்தரவு போட்டு விட்டாள். காலையில் விழித்த ராஜா, இதுபற்றி மந்திரியிடம் விசாரித்தார். மந்திரி, ராணியின் உத்தரவைச் சொல்ல, ராணியை அழைத்தார் ராஜா. மேலும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். ஒன்றும் புரியாத ராணி அவரிடம் காரணம் கேட்க, இத்தனை நாளும் என் நெஞ்சுக்குள் அந்த ராமனைப் பூட்டி வைத்திருந்தேனே! அவனது பெயரைச் சொன்னதன் மூலம், அவன் என் வாய் வழியாக வெளியேறி விட்டானே! இனி அவனை எப்படி என் நெஞ்சுக்குள் மீண்டும் கொண்டு வைப்பேன் என்றார். கோவிலுக்கு போவது நல்ல பக்தி. அதை விட உயர்ந்தது உள்ளத்துக்குள் எந்நேரமும் கடவுளை இருத்தி வைப்பது |
|
|
|