|
ஒரு மகானிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புணர்வு கொண்டு நடந்துகொண்டனர். ஆனால் மகான் எல்லா சீடர்களிடமும் சமநோக்குடனேயே நடந்து வந்தார். ஒரு நாள் சீடர்களுள் ஒருவன், சுவாமி? அன்றும் இன்றும் உங்களுக்கு இயலாது போனது எது? என்று கேட்டான். அன்றும், இன்றும், என்றும் யாரையும் வெறுப்பது என்பது எனக்கு இயலாத காரியம்! என்று சொன்னார் மகான். சீடர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார்கள். |
|
|
|