|
சீடன் ஒருவன் தன் குருவிடம், நாம் எதையாவது வேண்டினால் இறைவன் அதைக் கேட்கிறானா? என்று கேள்வி எழுப்பினான். அதற்கு குரு, கண்டிப்பாக இறைவன் கேட்கிறான். ஆனால் அது சரியான பிரார்த்தனையாக இருக்கவேண்டும். மனதிலிருந்து வருவதாக இருக்கவேண்டும். உலக ஆசை கொண்டவன் எப்படித் தன் குழந்தைக்காகவும், மனைவிக்காகவும் அழுகிறானோ, அதுபோல இறைவனுக்காக அழவேண்டும். அப்போது இறைவன் அருள்புரிவான்! என்றார். |
|
|
|