|
ஒரு ஊரில் வசித்த வள்ளல், தர்மம் செய்தே செல்வத்தை இழந்தார். பிறர் கேட்டு தான் இல்லையென சொல்லும் நேரம் வந்து விட்டதே என வருந்திய அவர் காசி சென்று உயிர்விட எண்ணினார். தன் வீட்டிலிருந்து கிளம்பினார். இரவாகி விட்டது. வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினார். அந்த சத்திரத்துக்கு ஏழை ஒருவன் வந்தான். அவரது வள்ளல் குணம் பற்றி கேள்விப்பட்டிருந்த அவன், அவரைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தான். கும்பிடப் போன தெய்வத்தை வழியிலேயே சந்தித்த மகிழ்வுடன், அவரிடம் பொருள் கேட்டு கோரிக்கை வைத்தான். அவரும் மறுக்க மனம் இல்லாமல், மறுநாள் தருவதாகக் கூறினார், அன்றிரவு சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாது நாளை அவன் முகத்தில் விழிப்பதை விட செத்துவிடுவதே மேல் என எண்ணி அங்கிருந்த பாம்பு புற்று ஒன்றில் கையை விட்டார். என்ன ஆச்சரியம்! அந்த நல்லபாம்பு அவர் கையை கொத்தாது தன் தலையில் இருந்த மணியை அந்த வள்ளலின் கையில் கக்கியது. வள்ளல் மகிழ்வுடன் அதை மறுநாள் அந்த ஏழையிடம் தந்தார். தர்மவான்கள் படும் துயரை ஆண்டவன் விரும்ப மாட்டான். |
|
|
|