|
ஒரு துறவியை சந்தித்த இளைஞன், “என்னிடம் கல்வி, அறிவு, அனுபவம், உழைப்பு என பல திறமைகள் இருக்கின்றன. இருந்தும் வெற்றி பெற முடியவில்லையே, என்ன செய்வது? என்று வருத்தமாகக் கேட்டான். அவனது குறை கேட்ட துறவி, “ஒரு பாறையை பிளப்பவன் நுõறு முறை அடித்தாலும், பாறை உறுதியாக ஒரு சிறு விரிசலும் விழாது இருக்கிறது. நுõற்று ஒராவது அடியில் இரண்டாய் பிளந்து விழுகிறது. அப்படியென்றால் அந்த நுõற்றி ஒன்றாவது அடி தான் சாதித்தது என்பதில்லையே! முன்னர் கொடுத்த நுõறு அடிகளும் பாறையின் பலத்தை குறைத்ததும் காரணம்தானே! அது ஒரு தொடர் முயற்சி. கல்வி, அறிவு, அனுபவம் என்பவையெல்லாம் உயர்வதற்கான படிக்கட்டுகளே. தொடர் முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும். நீ இன்னும் முயற்சித்துப் பார். வெற்றிப் படிக்கட்டில் நிற்பாய்” என அறிவுரை கூறினார். |
|
|
|