Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் கைவிடமாட்டார்!
 
பக்தி கதைகள்
கடவுள் கைவிடமாட்டார்!

கப்பல் ஒன்று கடலில் வழிதவறிச் செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கியது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி அருகிலுள்ள தீவில் கரையேறினான். இறைவா, இங்கிருந்து எப்படியாவது என்னைத் தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்தத் தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா? என்று பிரார்த்தித்தான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தவன், தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு சிறிய குடிசை ஒன்றைக் கட்டினான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.

நாட்கள் ஓடின. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னைத் தேற்றிக்கொண்டான். ஒரு நாள் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. இவனுடைய குடிசை வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதைப் பார்த்த அவன், அலறித் துடித்தான்.

இறைவா... என்னைக் காப்பாற்றும்படிதானே உன்னை மன்றாடி வேண்டினேன். நீ என்னவென்றால், இருந்தவற்றையும் பறித்துக் கொண்டாயே. இதுதான் உன் நீதியோ? என்று கதறி அழுதான். மறுநாள் காலை, ஒரு கப்பலின் சத்தம் இவனை எழுப்பியது. இவன் இருந்த தீவை நோக்கி அது வந்தது. அதைப் பார்த்தவன் மகிழ்ந்தான். கப்பல் சிப்பந்திகள், லைஃப் போட்டில் வந்து அவனை அழைத்துச் சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படித் தெரியும் என்று அவர்களிடம் அவன் கேட்க, தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதைப் பார்த்தோம். யாரோ தீவில் கரை ஒதுங்கி, காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம் என்றார்கள் அவர்கள். அப்போதுதான் இறைவன் குடிசையை எரித்த காரணம்  அவனுக்குப் புரிந்தது. அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. அவரசப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான். கடவுளுக்கு நன்றி சொன்னான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. இனிமேல் ஏதாவது சோதனை வந்தால், இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது; விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள், கடவுள் உங்களைக் கைவிடமாட்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar