|
ஒரு சமயம் ஸ்ரீதேவிக்கும் (மகாலட்சுமி), மூதேவிக்கும் இடையே, தங்களில் யார் அழகு என்ற பிரச்னை எழுந்தது. இதில் எதிர்பாராமல் சிக்கிக் கொண்டார் ஒரு கோமுட்டி செட்டியார். இருவரும், நீங்கள்தான் நடுவராக இருந்து இதற்குத் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். திணறினார் செட்டியார். யார் ஒருவரை அழகு என்று சொன்னாலும் மற்றவருக்குக் கோபம் வரும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என யோசித்தார். மகாலட்சுமியிடம் சிறிது தூரம் சென்று நடந்து வரச் சொன்னார். பிறகு மூதேவியிடம், இருந்த இடத்திலிருந்து நடந்து போகச் சொன்னார். முடிவாக மகாலட்சுமியிடம், நீங்கள் வருவது அழகாக இருக்கிறது என்றும் மூதேவியிடம், நீங்கள் போவது அழகாக இருக்கிறது எனவும் கூறிச் சமாளித்தார். இதுதானே நடைமுறை, வழக்கமும்கூட. மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்று, எப்போதும் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேசமயம், மூதேவியை நமது இல்லத்திலிருந்து விரட்டியடிக்கத் துடிக்கிறோம். சரிதானே. |
|
|
|