|
மகரிஷி ராஜசூய யாகம் செய்யும்படி நண்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். அன்பர்களின் உற்சாக, ஆதரவோடு தர்மபுத்திரன் ராஜசூய யாகம் செய்ய நிச்சயித்தார். ஆமாம், அது க்ஷத்தரியர்களுக்கு உசிதமானதே. வெற்றி! உங்களுக்கே! என்று கிருஷ்ணர் கூறினார். கிருஷ்ணனே அனுமதி அளித்தபின் இனி மாற்றமென்ன? தர்மபுத்திரனும், அவனது மனைவியும் சம்பதி சமேதராய் கடவுளை வணங்கி ராஜசூய யாக தீட்சை மேற்கொண்டார். அதில் ஒரு பாகமாக யாகக் குதிரை பூமி பிரதக்ஷிணத்திற்காக அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னால் கிருஷ்ணா, அர்ஜுனன் போன்றோர் பாதுகாப்பாகச் சென்றனர். அவர்கள் சிறிது காலத்திற்குப் பின் மயூரத்வஜன் என்ற அரசன் ஆளும் மணிபுர ராஜ்யத்தை அடைந்தனர். மயூரத்வஜன்கூட இப்போது ராஜசூய யாகம் செய்கிறான். அவனது யாகக் குதிரையை எப்படியாவது சிறைப்பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டே வந்துள்ளனர் இருவரும். கிருஷ்ணரும், ஆமாம் அவ்வாறே செய்வோம் என்று கூறினார். மறுநாள் அவர்கள் இருவரும் மரத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு யாகக் குதிரை வரும் வழியில் படையுடன் காத்திருந்தனர். என் உடல் மரத்துப் போனாற் போல் உள்ளது என்று கிருஷ்ணர் கூற, அர்ஜீனரும் என்னாலும் நகர முடியவில்லை என்றான். வீரர்களுக்கெல்லாம் வீரனான நானே சிலைபோல் அசையமுடியாமல் நிற்கிறேனே! இந்த விசித்ர நிலைமைக்கு காரணம் என்ன? என்று அர்ஜீனன் கிருஷ்ணரிடம் கேட்டான்.
அதற்கு கிருஷ்ணர், மணிபுர தேசத்தில் மாறுவேடத்தில் உலவினால் காரணம் அறிய இயலும் என்று கூறனார். கூறியதுபோலவே, அவர்கள் மாறுவேடத்தில் மணிபுரநகரில் புகுந்தனர். அங்கே மக்கள் அரசனைப் புகழ்வதைக் கேட்டார்கள். ஆஹா! மயூரத்வஜ மகாராஜாவுக்கு சுயநலம் துளிகூட இல்லை. அவர் இன்னொரு சிபி சக்ரவர்த்தியே! அவர் அரசராக இருப்பது நம் அதிர்ஷ்டம் என்று இருவரும், பெருமைப்பட்டுக் கொண்டனர். மறுநாள் அவர்கள் இருவரும் அதே வேடத்தில் அரச சபைக்குச் சென்றனர். அவர்களைப் பார்த்ததும் அரசன். உங்கள் இருவரையும் பார்த்தால் வேற்று தேசத்தவர் போலுள்ளீர்கள். உங்களுக்கு என்னிடமிருந்து ஏதாவது உதவி தேவையா? எதுவாயினும் கூறுங்கள் என்று கேட்டார். இல்லை, மகாராஜா! என் மகனுடன் நாங்கள் வைசாலி நகருக்குச் சென்றோம். காட்டு வழியில்... சொல்லுங்கள் என்னவென்று கேட்டார் மறுபடியும்.
ஒரு சிங்கம் கர்ஜித்தபடி எங்கள் மீது பாய்ந்து... ... என் மகனைப் பிடித்துக் கொண்டது அந்தச் சிங்கத்திடம்... இருந்து என் மகனை காப்பாற்ற வேண்டும் என்று மகாராஜாவிடம் இருவரும் கேட்டனர். இருவரும் காட்டுச் சென்றனர், தயவு செய்து என் பையனை விட்டுவிடு. அவனுக்கு பதிலாக எங்களில் ஒருவரைத் தின்று உன் பசியை ஆற்றிக் கொள் என்றோம். சிறுவனை விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. யாராவது சத்புருஷரை எனக்கு உணவாக அளிக்க வேண்டும். எனக்குத் தெரிந்த வரை மயூரத்வஜ மகாராஜாவைவிட உத்தமர் யாருமில்லை. அவருடைய உடம்பின் வலது பாகத்தை எனக்கு உணவாக அளித்தால்போதும் உன் மகனை விட்டுவிடுகிறேன் என்று சிங்கம் கர்ஜித்தப்படி கூறியது. சிங்கம் சொன்னதை, மகாராஜாவிடம் மாறுவேடத்தில் இருந்த கிருஷ்ணனும், அர்ஜீனனும் கூற, என் மகனின் உயிர் உங்கள் கருணையை நம்பியே உள்ளது என்று கைகூப்பி வணங்கிக் கேட்டனர். மகாராஜாவோ, உங்களுக்குத் தேவையான என் உடலின் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அரசன் சொல்லி முடிக்கும் முன்பே மகாராணி திரையின் பின்னிருந்து வெளியே வந்தாள். நான் அவரில் அர்தங்கி (சரிபாதி). அவருக்குப் பதிலாக என்னை சிங்கத்திற்கு உணவாக அர்ப்பணியுங்கள் என்று ராணி கூறினார். மன்னிக்கவும்! சிங்கத்திற்குத் தேவையானது அரசனின் உடலின் வலது பாகம். அர்தாங்கி என்றால் கணவனின் இடது பாகமே. அவர்கள் அவ்வாறு பேச்சை வளர்த்து நேரத்தை வீணடிப்பது மயூரத்வஜனுக்குப் பிடிக்கவில்லை.
நேரத்தை வீணடிக்காதீர்கள்; இந்த வாளால் என் உடலைத் துண்டாக்குங்கள், சீக்கிரம் என்று கையில் வாளை எடுத்துக் கொடுத்தார். மாறுவேடத்தில் இருந்த கிருஷ்ணர் வாளை ஓங்கும் போது அரசனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அரசே! உன் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது. உயிர்த் தியாகம் செய்வது உனக்கு விருப்பமில்லையா? என்று மாறுவேடத்தில் இருந்த கிருஷ்ணர் கேட்டார். மகாராஜாவோ, அய்யா! கண்ணீர் விடுவது இடது கண்தானே தவிர இரண்டும் கண்களும் இல்லை அல்லவா? மற்றவர்களுக்கு உதவும் பாக்கியம் தனக்கு இல்லாமல் போனதே என்று என் உடலின் இடது பாகம் கவலை கொள்கிறது. வேறு யோசனை வேண்டாம். உங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று மகாராஜா வெட்ட சொன்னார் தன் உடலின் பாதியை. உடனே கிருஷ்ணரும் அர்ஜுனனும் நிஜ உருவத்தில் தரிசனமளித்தனர் மகாராஜாவுக்கு. கிருஷ்ணர். மகாராஜா, உன் தியாக எண்ணம் அபூர்வமானது. எத்தனையோ வம்சங்களுக்கு ஆதர்சமானது. உன் பெயர் நீங்காத புகழுடன் நிலைத்து நிற்கும் என்று ஆசிகூறி வழங்கினார். தேவா! கிருஷ்ணா என்னிடம் ஒருபோதும் சுயநலம் அண்டாதிருக்க அனுக்ரகம் செய்யுங்கள்! என்று கைகூப்பி வணங்கி நின்றார் மகாராஜா. கிருஷ்ணரும் அர்ஜுனனும் மயூரத்வஜனின் ராஜயசூய யாகத்தில் கலந்து கொண்டு அவனை ஆசீர்வதித்தனர். கூடியுள்ளவர்கள் அனைவரும், வெற்றி! வெற்றி! என்று கொண்டாடினார்கள். சுயநலமற்ற அன்பினால் சாதிக்க இயலாதது என்ன உள்ளது? அர்ஜுனா! அதனால்தான் மயூரத்வஜன் அஜேயன் வெல்ல முடியாதவன் என்று கிருஷ்ணர் கூறினார். மயூரத்வஜ மகாராஜா! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூடியுள்ளவர்கள் அனைவரும் வாழ்த்தினர். யாகம் நிறைவடைந்தபின் கிருஷ்ணரும் அர்ஜுனனும் மயூரத்வஜனோடு சேர்ந்து வந்து தர்மபுத்திரரின் ராஜசூய யாகத்தை நிறைவேற்றி வைத்தனர். |
|
|
|