Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிரித்தாள் தங்கப்பதுமை!
 
பக்தி கதைகள்
சிரித்தாள் தங்கப்பதுமை!

அசோக வனத்தில் சீதை மரத்தடியில் அமர்ந்திருக்க, அதன் மீது அனுமன் ராமபிரானிடம் இருந்து கொண்டு வந்த செய்தியுடன், அரக்கர்களுக்குத் தெரியாமல் அமர்ந்து இருக்கிறார். அப்போது, அங்கு வந்த ராவணன் , சீதா தேவியிடம், பெண்ணே!  எவ்வாறு ஓடிவிட்ட நதியின் பிரவாகம், திரும்பப் போவதில்லையோ, அதே போலத் தான் இளமையும் போய் விட்டால் திரும்பாது. அதனால், உனது இளமைப் பருவத்தை வீணாக்காமல், என்னை மணந்து இலங்கையின் மகாராணி போல வாழலாமே, என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான். அதுகேட்ட சீதை, ஒரு துரும்பை அவன் முன் போட்டு சிரித்தாள். உணர்ச்சி வசப்பட்டு சீற வேண்டிய நேரத்தில், அவள் சிரித்ததற்கான காரணம் என்ன தெரியுமா? சீதா–ராமர் கல்யாணத்திற்கு பரமேஸ்வரனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. காரணம், அவர் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவர். அதனால் அழைப்பை எந்த இடத்திற்கு அனுப்புவது என்று தெரியாமல், ஜனகர் அதைத் தவிர்த்து விட்டார்.

ஆனால், சீதைக்குத் திருமணம் நடப்பதை அறிந்து பரமேஸ்வரன் மிதிலைக்கு வந்து விட்டார். ஆனால், என்ன செய்ய... அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து, பெரியவர்களை நமஸ்கரித்துக் கொண்டு இருந்தார்கள் மணமக்கள். பரமசிவனைக் கண்ட ராமபிரானும், சீதாதேவியும், அவரது பாதம் தொட்டுப் பணிந்து நமஸ்கரித்தனர். அவர்களுக்கு கொடுக்க சிவனிடம் பரிசு ஏதுமில்லை. அதைக் குறிப்பால் உணர்ந்த சீதை சிவனிடம், தாங்கள் எங்களுக்கு ஆசிர்வாதம் என்ற பரிசை மட்டும் கொடுத்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம், என்றாள். அதற்கு சிவன் அப்படிக் கூறாதே, என்னிடம் மிக உயர்ந்த பொருள் ஒன்று உள்ளது. அதையே உனக்குப் பரிசாக அளிக்கிறேன் எதிர்காலத்தில் அது உனக்குப் பயன்படும், என்றார். வியப்பில் ஆழ்ந்த சீதை, அது என்ன? எனக் கேட்க, சிவன் சிரித்தபடியே

என்னுடைய இந்த சிரிப்பு தான் அது, என்றார். அது எப்படி விலை உயர்ந்த பொருளாகும்’ என்று சீதை நினைக்க, அவளது உணர்வைப் புரிந்து கொண்ட சிவன் விளக்கம் அளித்தார். சீதா, பறக்கும் கோட்டைகளைக் கொண்ட மூன்று அரக்கர்கள் தேவர்களை வதைத்தனர். கோட்டைகளில் பறந்து சென்று மக்கள் நெருக்கம் மிக்க இடங்களில் திடீரென இறக்கினர். அதன் அடியில் சிக்கிய உயிர்கள் எல்லாம் மடிந்தன. அவர்களது கொடுமையை ஒழிக்க, அந்தக் கோட்டைகளை என் சிரிப்பால் எரித்தேன். அந்த அரிய சிரிப்பை உனக்குப் பரிசாகத் தருகிறேன், என்றார். சிவனது சிரிப்பால் கோட்டைகள் எரிந்தது போல, ராவணன் முன், அவர் தந்த சிரிப்பை காட்டி இலங்கை எரிய காரணமானாள் சீதா. சிவாம்சமான அனுமன், அந்தப் பணியை கச்சிதமாக செய்து முடித்தார். கழு-வு-வர். கோபம் வரும் நேரத்-தி-லும் கூட, பாதத்-தை-யும், கைக-ளை-யும் கழு-விக் கொண்-டால் கூட கோபம் தீரும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar